தயாரிப்பாளர் ரவிந்தர் சந்திரசேகரை மணந்தார் நடிகை மஹாலக்ஷ்மி
Last Updated on September 1, 2022 by Dinesh
பிரபல சின்ன திரை நடிகைக்கும் தயாரிப்பாளர் ரவிந்தர் சந்திரசேகருக்கும் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது தற்போது அந்த புகைபடங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது..

கடந்த 2007 மற்றும் 2008 ஆகிய காலகட்டங்களில் sun music தொலைகாட்சியில் விஜேவாக மீடியா துறைக்கு அறிமுகமானவர் தான் vj mahalakshmi..
90’s kids – களின் மிகவும் பிடித்தமான விஜேகளில் மஹாலக்ஷ்மியும் ஒருவர். சன் ம்யூசிக்கில் அப்பொழுது பார்வையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான பாடல்களை டிவியில் ஒளிபரப்ப தாங்களே சேனலுக்கு கால் செய்து பிடித்த பாடலை விஜேவிடம் தெரிவித்து அப்பாடலை டிவியில் ஒளிபரப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது..
மிகவும் பிரபலமான இந்த நிகழ்ச்சியை விஜே மஹாலக்ஷ்மி தொகுத்து வழங்கி வந்தார். இவரது துரு துரு பேச்சிகளாலும், கியூட்டான சிரிப்பினாலும் இவருக்கு அப்போதே ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்..
பின்னர், விஜேவில் இருந்து சின்ன திரை நடிகையாக மாறினார் மஹாலக்ஷ்மி. சின்ன திரையில் அரசி, வாணி ராணி உள்ளிட்ட சீரியலில் தொடங்கி
தற்போது ஒளிப்பரப்பாகி வரும் அன்பே வா உட்பட பல தமிழ் சீரியல்களில் வில்லியாகவும், குண சித்திர கதாபாத்திரமாகவும் நடித்து வருகிறார் நடிகை மஹாலக்ஷ்மி..
இந்நிலையில் தற்போது, முருங்கைக்காய் சிப்ஸ், மார்கெண்டேயனும் மகளிர் கல்லூரியும்,
நட்புணா என்னணு தெரியுமா உள்ளிட்ட படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ரவிந்தர் சந்த்ரேசேகரை திருமணம் செய்து உள்ளார் நடிகை மஹாலக்ஷ்மி..
இவர்கள் இருவரது திருமணமும் திருப்பதியில் இன்று அதிகாலை நடைபெற்றுள்ளது. இதனை இவருவரும் தங்களது அதிகாரபூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளனர்..
தன் திருமண புகைபடத்தை தன்னுடைய வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட நடிகை மஹாலக்ஷ்மி “என் வாழ்க்கையில் நீ கிடைத்தற்க்கு நான் அதிர்ஷ்டசாலி” என பதிவிட்டு love you ammu என குறிப்பிட்டுள்ளார்..
விஜே மஹாலக்ஷ்மிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. மேலும் தயாரிப்பாளர் ரவிந்தர் சந்திரசேகருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பது குறிபிடத்தக்கது.