Writer படத்தின் சூப்பரான அப்டேட் வெளியானது
Last Updated on December 13, 2021 by Dinesh
Writer படத்தின் சூப்பரான அப்டேட் குறித்து இயக்குனர் பா. ரஞ்சித் வெளியிட்ட அறிவிப்பு பின்வருமாறு..

neelam productions சார்பில் இயக்குனர் பா. ரஞ்சித் தயாரிப்பில் நடிகர் சமுத்திரகணி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘writer’.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்று வருகிறது.
இதற்க்கு முன் neelam productions தயாரிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் மற்றும் கயல் ஆனந்தி நடிப்பில் வெளிவந்த ‘பரியேறும் பெருமாள்’
மற்றும் இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ் மற்றும் கயல் ஆனந்தி நடித்த ‘இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு’ ஆகிய படங்கள் திரைக்கு வந்து சூப்பர் ஹிட் அடித்துள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது நீலம் ப்ரொடக்ஷன் இயக்குனர் பிராங்க்லின் ஜேக்கப் இயக்கத்தில் உருவாகி வரும் ரைட்டர் திரைபடத்தை தயாரித்து வருகிறது.
விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ , உறியடி 2, ஆகிய படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இப்படத்திற்க்கு இசையமைக்கிறார்.
(writer movie cast )ரைட்டர் திரைபடத்தில் சமுத்திரகனி, திலீபன், இனீயா, ஹரிக்ரிஷ்ணன் அன்புதுரை, சுப்ரமணியம் சிவா, ஜி.எம். சௌந்தர், மகேஸ்வரி, லிஸ்ஸி ஆண்டனி, கவிதா பாரதி, கவின் ஜே பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்..
இப்படத்தின் டீசர் சமீபத்தில் யுட்யூப் வலைதளபக்கத்தில் ரைட்டர் படக்குழுவினர் வெளியிட்டனர். படத்தின் டீசரில் காவல் துறையில் ரைட்டராக பணிபுரியும் சமுத்திரகனி,
தனது உயர் அதிகாரி சொல்வதை எழுதும் ரைட்டராக இல்லாமல் பாதிக்கபட்டவர்களின் வெளிச்சத்தையும் வெளிக்காட்டும் ரைட்டராக நடிப்பில் அசத்தியுள்ளார்.
Writer படத்தின் சூப்பரான அப்டேட் வெளியானது
மேலும், ரைட்டர் டீசரில் இடம் பெற்றுள்ள வசனங்கள் தற்போது எல்லோரையும் வெகுவாகவே கவர்ந்து வருகிறது.
இது வரை ரைட்டர் படத்தின் டீசரை யுட்யூப் தளத்தில் 2.1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வருகின்றது.
டீசர் மூலம் எல்லோரது கவனம் பெற்ற ரைட்டர் திரைப்படம் வரும் டிசம்பர் 25 கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு ( writer movie release date ) டிசம்பர் 24 ஆம் தேதி ‘writer’ திரைப்படம் திரைக்கு வர உள்ளது.
இதனையடுத்து ரைட்டர் படத்தின் ட்ரைலர் வெளியாகும் தேதி குறித்து இயக்குனர் பா. ரஞ்சித் தற்போது வெளியிட்டுள்ளார்.
படத்தின் ட்ரைலர் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி வெளியாகும் என்ற தகவலை பகிர்ந்துள்ளார்.
ரைட்டர் படத்தின் டீசர் கீழே கொடுக்கபட்டுள்ளது :