கர்ணன் பாடல் ‘பண்டாரத்தி’ இன்று வெளியானது…
Last Updated on May 26, 2021 by Dinesh
கர்ணன் பாடல் ‘பண்டாரத்தி’ இன்று மாலை 5.30 மணிக்கு இணையத்தில் வெளியானது…

‘பரியேறும் பெருமாள்’ என்ற வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது தனுஷ் நடிக்கும் கர்ணன் திரைப்படம் பெரும் எதிர்ப்பார்ப்புடன் பார்க்கபடுகிறது.
இப்படத்தின் “கண்டா வர சொல்லுங்க” எனும் முதல் பாடல் சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியிடபட்டது. இப்பாடல் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கிராமத்து பாடல்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே இப்போதும் வரவேற்பு இருப்பதை இந்த பாடல் நிரூபித்து காட்டியுள்ளது.
இந்த பாடலை கிடக்குழி மாரியம்மாள் மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.
“கண்டா வர சொல்லுங்க” பாடல் வரிகள் கொண்ட வீடியோவாக இணையத்தில் வெளியிடபட்டது. அதில் .பெருமளவு பறை இசை கருவிகளை பயன்படுத்தி இருப்பதை நம்மால் காண முடியும்..
பாடலின் ஆரம்பம் முதல் இறுதி வரை பறை இசை கருவிகள் கொண்டு பாடலை இசையமைத்து இருக்கிறார் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.
வெகு நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் பறை இசையில் வெளிவந்த பாடலுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதை அடுத்து கர்ணன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இந்த பாடலானது இது வரை யுட்யூப் தளத்தில் 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. கர்ணன் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு நல்ல திருப்பு முனையாக இந்த படம் அமையும் என எதிர்பார்க்கபடுகிறது..
கர்ணன் பாடல் ‘பண்டாரத்தி’ இன்று வெளியானது…
மேலும், இதனை தொடர்ந்து கர்ணன் தனுஷ் சாங் இரண்டாவது பாடல் இன்று வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் தெரிவித்து இருந்தனர்.
அதன் படி, இன்று மாலை 5.30 மணிக்கு கர்ணன் படத்தின் .இரண்டாவது பாடலான பண்டாரத்தி எனும்,பாடல் யுட்யூப் தளத்தில் வெளியானது.
பாடலின் ஆரம்பத்தில் “பண்டாரத்தி எனும் காலபறவை ஏமாராஜாவின் மாடவிளக்கான கதை” எனும் டைட்டில் உடன் தொடங்குகிறது. பாட்டின் இறுதியில் “காதலே பிரபஞ்ச மாடத்தின் வெளிச்சம்” என முடிகிறது.
இந்த அழகிய வரிகள் கொண்ட பாடலை முழுவதும் கிராமத்து இசையில் கொடுத்து இருக்கிறது கர்ணன் படக்குழு.
இந்த பாடலை முழுக்க முழுக்க கிராமத்து இசை கருவிகளை கொண்டு உருவாக்கபட்டுள்ளது அதனை பாடல் வரிகள் கொண்ட வீடியோவில் காண முடிகிறது.
வெகு நாட்களுக்கு பிறகு இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா அவர்களின் குரலை இந்த பாடலின் மூலம் கேட்க முடிகிறது. இது தேனிசை தென்றல் தேவாவின் ரசிகர்களை இன்ப அதிச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அவரின் குரலை இணையத்தில் பண்டாரத்தி பாடலின் மூலம் கேட்டதும் பலரும் தேவாவின் குரலில் பண்டாரத்தி பாடல் மிக அருமையாக உள்ளது எனவும், இன்னமும் இவரின் குரல் முன்பை போலவே உள்ளது எனவும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த பாடலை பாடலாசிரியர் யுகபாரதி எழுதியுள்ளார் பாடல் வெளியான சிறிது நேரத்தில் 4 லட்சம் பார்வையாளர்களை கடந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கர்ணன் பாடல் ‘பண்டாரத்தி’ இன்று யுட்யூப் இணையத்தில் வெளியானதை அடுத்து தனுஷின் ரசிகர்கள் பண்டாரத்தி பாடலை கொண்டாடும் விதமாக சமூக வலைத்தளங்களில் ஹஸ்டாக் உருவாக்கி வைரலாக்கி வருகின்றனர்.