பண்டாரத்தி பாடல் பெயர் மாற்றபட்டுவிட்டதா? அதனை பற்றிய முழு விவரம் முழு விவரம் இதோ…

தனுஷ் நடிக்கும் 41 வது திரைப்படம் கர்ணன் இப்படத்தில் இதுவரை மூன்று பாடல்கள் வெளிவந்து உள்ளது. மூன்று பாடல்களுமே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
முதலில் வெளியான கண்டா வர சொல்லுங்க பாடல் என்ற பாடல் கேட்பவரின் மனதை உலுக்கியது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அந்த பாடலில் அமைந்த பறை இசை, பாடல் பாடிய விதம் என அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களையும் கவர்ந்தது.
இதனை தொடர்ந்து இரண்டாவது பாடலாக பண்டாரத்தி புராணம் மற்றும் மூன்றாவது பாடலாக தட்டான் தட்டான் என்ற பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் மதுரை உயர் நீதி மன்றத்தில் வழக்கு ஒன்று தொடரபட்டது.
பண்டாரத்தி பாடல் பெயர் மாற்றபட்டுவிட்டதா? விவரம்…
அந்த வழக்கில், மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் படத்தில் இடம் பெற்றுள்ள பண்டாரத்தி புராணம் என்ற பாடல் குறிப்பிட்ட சமுகத்தினை குறிப்பிடுவதாக அமைந்துள்ளது. எனவே படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கேட்டுக்கொள்ளபட்டது.
இதை தொடர்ந்து, படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் சர்ச்சைக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக அதிரடியான முடிவை எடுத்துள்ளார்.
அதனை அறிக்கையாகவும் வெளியிட்டு தனது முடிவை அறிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:
மாரி செல்வராஜ் அறிக்கை
அனைவருக்கும் அன்பின் வணக்கங்கள்.
கர்ணன் திரைப்படம் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை நீங்கள் அளித்து வரும் ஆதரவும், நம்பிக்கையும் எனக்கு பெரும் உத்வேகத்தையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது.
ஒரு இளம் இயக்குனரான என் மீதும் நீங்கள் காட்டும் எதிர்பார்ப்பும் மரியாதையும் தான் சினிமா எனும் மாயக்கலையை எவ்வளவு பொறுப்போடும் நான் அணுக வேண்டும்.
பண்டாரத்தி புராணம்
என்பதை எனக்கு காற்றுகொடுக்கிறது. அத்தகைய பொறுப்புணர்ச்சியோடும் கலைதன்மையோடும் தான் என் காட்சி படிமங்களை பெரும் சிரத்தையோடு உருவாக்குகிறேன். பண்டாரத்தி புராணம் அப்படி உருவாக்கபட்டது தான். சொந்த அத்தையாக, அக்காவாக, ஆச்சியாக, பெரியம்மாவாக என் நிலத்தோடும் இரத்ததோடும் கலந்த காலத்தின் தேவதைகளான பண்டாரத்திகளின் கதைகாலைதான் நான் என் திரைக்கதையின் கூழாங்கர்களாக சிதறவிட்டு காட்சிபடுத்தினேன்.
மஞ்சனத்தி புராணம்
ஆனால் நம் அடுக்குமுறை உளவியலில் சில பெயர்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்பது புரிந்துகொள்ள முடியாததாகவும் விலக முடியாததாகவும் இருக்கிறது. அதன் அடிபடையில் பண்டாரத்தி புராணம்.
பாடலுக்கு ஏற்பட்டிருக்கும் விவாதத்தையும், வருத்ததையும், கோரிக்கையும் முடித்து வைப்பத்தற்காக பண்டாரத்தியை மஞ்சனத்தி என்று அழைக்கலாம் என முடிவு செய்து இருக்கிறோம்.
தேவதைகள் எந்த பெயரில் அழைக்கபட்டலென்ன பெயர் மாறுவதால் அவர்கள் காட்டும் மாட வெளிச்சம் குறைந்து விட போகிறதா என்ன? இனி எமராஜாவின் மடவிளக்காக மஞ்சனத்தி இருப்பாள்.
பண்டாரத்தி பாடல் பெயர் மாற்றபட்டுவிட்டதா? இனி ஏமன் கர்ணனை ஆட வைப்பதற்காக மஞ்சனத்தி புராணத்தை பாடுவான் கர்ணன் ஆடுவான். ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியும் பிரியமும் எப்போதும்.
காதலே பிரபஞ்ச மாடத்தின் வெளிச்சம் என முடித்து தனது அறிக்கையை வெளியிட்டார். படத்தில் மாற்றம் செய்ததை போல யுட்யூப் விதிகளின் படி இரண்டு நாட்களில் தானாக அதிலும் மாறிவிடும்.. பண்டாரத்தி புராணம் இனி மஞ்சனத்தி புராணமாக பாடல் ஒளிக்கும்.