மாஸ்டர் செய்த சாதனை 9நாடுகளில் டிரெண்டிங் ஆன டீசர்…

மாஸ்டர் செய்த சாதனை 9நாடுகளில் டிரெண்டிங்கில் இடம் பிடித்தது விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்.

மாஸ்டர் செய்த சாதனை 9நாடுகளில் டிரெண்டிங் ஆன டீசர்
ThalapathyVijay

ரசிகர்களின் பெரும் எதிர்பார்புக்கு இடையே நேற்று தீபாவளியை முன்னிட்டு விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைபடத்தின் டீசரை வெளியிட்டது படக்குழு.

இதை தொடர்ந்து ரசிகர்கள் நடிகர் விஜய் புகைப்படம் மற்றும் மாஸ்டர் திரைபடத்தின் போஸ்டர்களை பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தி வந்தனர்.

பின்னர் அவை சமூக வலைத்தளங்களில் masterteaser என்ற ஹஸ்டாக் டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்தது..

வெகு நாட்களாகவே ரசிகர்கள் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைபடத்தின் அப்டேட்களை எதிர் நோக்கி இருந்தனர்.

அதை நிறைவு செய்யும் விதமாக படக்குழு நேற்று மாஸ்டர் திரைபடத்தின் டீசரை இணையத்தில் வெளியிட்டனர் டீசர் வெளியான சில நிமிடங்களிலே லட்சம் பார்வையாளர்களை கடந்து சென்றது.

மாஸ்டர் படத்தின் டீசரில் ஸ்டைலான விஜயை காண்பித்து இருக்கிறார் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மேலும் டீசரில் இடம் பெற்றுள்ள வசனங்கள் ரசிகர்களை படத்தை திரையில் எப்போது காண்பது என்ற ஆர்வத்தை தூண்டுகிறது.

டீசரை பார்க்கும் போது இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என தோன்றுகிறது. விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தின் டீசர் வெளியானது.

மாஸ்டர் செய்த சாதனை 9நாடுகளில் டிரெண்டிங் ஆன டீசர்…

மாஸ்டர் செய்த சாதனை டீசர் வெளியான சிறிது நேரத்திலே நேற்று 9நாடுகளில் டிரெண்டிங்கில்இடம் பிடித்துள்ளது.

இந்தியா, ஸ்ரீலங்கா, சிங்கபூர் நாடுகளில் டிரெண்டிங்கில் முதல் இடத்திலும் மலேசியாவில் இரண்டாம் இடத்திலும் இருந்தது.

மேலும் சுவிட்ஜெர்லாண்ட்ந்தில் 10வது இடத்திலும், மால்டாவில் 13வது இடத்திலும், நியூஜீலாந்தில் 15வது இடத்திலும், நார்வேவில் 18வது இடத்திலும் மற்றும் அயர்லாந்தில் 24வது இடத்திலும்

மாஸ்டர் திரைபடத்தின் டீசர் டிரெண்டிங் பட்டியலில் இடம் பிடித்துள்ளது இதனை படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

தற்போது வரை இந்திய அளவில் முதல் இடத்தையே பிடித்துள்ளது. மேலும். டீசர் வெளியான 24 மணி நேரத்திற்குள் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது 18லட்சம் பேர் இதனை லைக் செய்துள்ளனர்.

ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிபிடத்தக்கது. இதை கொண்டாடும் விதமாக விஜய் ரசிகர்கள் இணையத்தில் masterteaserrage என்ற ஹஸ்டாக் உருவாக்கி அதனை தற்போது ட்ரெண்ட் செய்து வருகின்றனர்..

இந்த சாதனையை கொண்டாடும் விதமாக சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்

மேலும் தங்கள் படத்தை திரையில் காண ஆவலுடன் இருப்பதாகவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்..

மாஸ்டர் திரைப்படம் வரும் 2021 பொங்களுக்கு திரைக்கு வரும் என அனைவராலும் பெரிதும் எதிர் பார்க்கபடுகிறது.

தற்போது கொரோனா ஊரடங்கு காலம் என்பதனால் மாஸ்டர் திரைப்படம் திரை அரங்குக்கு வந்தாலும் அவை திரை அரங்கில் 100% சதவீதம் இருக்குகைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளிப்பது சந்தேகம் தான் என ரசிகர்கள் மத்தியில் கருத்து நிலவி வருகிறது..

ஏனெனில் கொரோனாவை கட்டுபடுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு கட்டுபாட்டு விதிமுறைகளை வெளியீட்டு உள்ளது. அதில் வணிக வளாகம், திரை அரங்குகள் போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் 50% சதவீதம் நபர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என அரசு உத்தரவுவிட்டு உள்ளது.

ஆகையால், மாஸ்டர் திரைபடத்திற்க்கு திரை அரங்குகளில் 100% சதவீத இடம் அனுமதிக்கபடுமா என்பதினை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Exit mobile version