அஜீத் நடிக்கும் துணிவு படத்தின் மெரட்டலான செகண்ட் லுக் வெளியானது !
Last Updated on September 22, 2022 by Dinesh
அஜீத் நடிக்கும் துணிவு படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று அதிகாரபூர்வமாக படக்குழுவினரால் வெளியிடபட்டது..

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக தனது 61-வது நடிக்கும் அஜீத் குமார் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி அஜித்தின் ரசிகர்களை உற்சாகபடுத்தி உள்ளது..
தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் ak 61 படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் இயக்குகிறார்.
இந்த படத்திற்க்கு துணிவு என தலைப்பு வைக்கபட்டு படத்தின் முதல் பார்வையும் நேற்று மாலை வெளியானது..
துணிவு படத்தின் முதல் பார்வையில் அஜீத் கையில் துப்பாக்கியுடன் நாற்காலியில் ஸ்டைலாக சாய்ந்துபடுத்தபடி இருக்கும் முதல் பார்வை வெளியானது.
மேலும் அந்த புகைபடத்தில் அஜீத் வெள்ளை தாடி மற்றும் தலை முடியுடன் காதில் கடுக்கன் அணிந்து இதுவரையில் இல்லாத ஒரு புதிய தோற்றத்துடன் துணிவு முதல் பார்வையில் பார்க்க முடிகிறது..
ak 61 படத்தின் புதிய அப்டேட்களை எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு படக்குழுவினர் படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வையை வெளியிட்டு இன்ப அதிர்ச்சியை கொடுத்தனர்..

துணிவு படத்தின் முதல் பார்வை நேற்று மாலை வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கும் நிலையில் படத்தின் இரண்டாவது பார்வையும் இன்று வெளியாகி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் துணிவு படக்குழுவினர்..
தற்போது வெளியாகி இருக்கும் துணிவு படத்தின் இரண்டாவது பாரவையில் அஜீத் குமார் RUGGED லுக்கில் ஸ்டைலிஷ் தோற்றதுடன் காணபடுகிறார்.
இதையடுத்து துணிவு படத்தின் இரண்டாவது போஸ்டரும் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது..
துணிவு படத்தில் அஜீத் குமார், மலையாள நடிகை மஞ்சு வாரியர், யோகி பாபு, சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் புகழ் பெற்ற ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்..