Cinema NewsKollywood

கவின் நடிப்பில் ரொமான்டிக் வெப்சீரிஸ்

Last Updated on January 29, 2022 by Dinesh

கவின் நடிப்பில் ரொமான்டிக் வெப்சீரிஸ் ஒன்று உருவாகி வருகிறது. தற்போது அதன் பஸ்ட் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது..

கவின் நடிப்பில் ரொமான்டிக் வெப்சீரிஸ்
Kavin & Reba monica

விஜய் டிவியில் ஒளிப்பரபான பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று மிகவும் பிரபலமானவர் கவின். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் விஜய் டிவியில் ஒளிப்பரபாகி வந்த மிக பிரபலமான,

சரவணன் மீனாட்சி தொடரில் கவினின் வேட்டையன் என்ற கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்து இருந்தது.

இதை தவிர கவின் தமிழில் பீட்ஸா, இன்று நேற்று நாளை சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார்.

அதனை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் சிவா அரவிந்த் இயக்கத்தில் வெளிவந்த நட்புனா என்னணு தெரியுமா என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.

இப்படத்தில் கவின், ரம்யா நம்பீசன், ராஜு ஜெயமோகன், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்தது. இத்திரைபடத்தினை தொடர்ந்து கவின் மற்றும் அம்ரிதா அய்யர் ஆகியோர் இணைந்து நடித்த,

லிப்ட் திரைப்படம் கடந்தாண்டு ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

லிப்ட் திரைபடத்திற்க்கு பிறகு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ்‌ தயாரிக்கும் ஊர்க்குருவி என்ற படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கிய டாக்டர் மற்றும் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் பீஸ்ட் திரைபடத்தில் உதவி இயக்குனராகவும் கவின் பணியாற்றியுள்ளார்.

இதனை தொடர்ந்து தற்போது கவின் மற்றும் பிகில் படத்தில் நடித்த ரெபா மோனிகா ஜான் ஆகியோர் இணைந்து ரொமான்டிக்கான வெப்சீரிஸில் நடிக்க உள்ளனர்.

அந்த வெப்சீரீஸ்க்கு ஆகாஷ் வாணி என்று பெயரிடபட்டு அதன் பஸ்ட் லுக் போஸ்டரும் தற்போது வெளியாகி உள்ளது..

கவின் நடிப்பில் ரொமான்டிக் வெப்சீரிஸ் ஆகாஷ் வாணி வெப்சீரிஸின் பஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா இன்று மாலை வெளியீட்டு ஆகாஷ் வாணி குழுவிற்க்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்து உள்ளார்.

இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இயக்குனர் ஈநாக் ஆகாஷ் வாணி வெப்சீரிசை இயக்குகிறார். இந்த வெப்சீரிஸ் ஆஹா என்ற ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !