Tamil CinemaUpdates

இயக்குனர் சிம்பு தேவனை பாராட்டிய பாரதிராஜா

Last Updated on April 26, 2022 by Dinesh

இயக்குனர் சிம்பு தேவனை பாராட்டிய பாரதிராஜா நெகிழ்ந்து நன்றிகள் தெரிவித்த சிம்பு தேவன்…

இயக்குனர் சிம்பு தேவனை பாராட்டிய பாரதிராஜா
director Chimbu Devan

கடந்த 2006 ஆம் ஆண்டு வைகைபுயல் வடிவேல் நடிப்பில் உருவான காமெடி திரைப்படமான இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

இதற்க்கு முன் இயக்குனர் சேரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இயக்குனர் சேரன் இயக்கத்தில் 2000-த்தில் வெளிவந்த வெற்றி கொடிக்கட்டு படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் இயக்குனர் சிம்பு தேவன்.

அதன் பிறகு, இயக்குனராக முதன் முதலில் இயக்கிய படம் தான் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி இப்படம் 2006 ஆம் ஆண்டு திரைக்கு வந்து மிக பெரிய வெற்றியை பெற்றது.

முதல் படமே இவருக்கு மிக பெரிய வெற்றி படமாக அமைந்ததை அடுத்து தனது இரண்டாவது படத்தை நடிகர் சந்தானத்தை வைத்து அரை எண் 305-இல் கடவுள் படத்தை இயக்கினார்..

இப்படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ், சந்தானம், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்து 2008 ஆம் ஆண்டு திரைக்கு வந்து ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை அடுத்து ராகவா லாரன்ஸ் வைத்து இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் என்ற படத்தினை இயக்கினார்.

இப்படம் கெளபாய் கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கபட்ட திரைப்படம் ஆகும்.

தமிழில் இதற்க்கு முன் நடிகர் ஜெய்சங்கர் நடிப்பில் வெளிவந்த கங்கா (1972) திரைபடத்திற்க்கு பிறகு 38 ஆண்டுகள் கழித்து தமிழில் எடுக்கபட்ட மற்றுமொரு கெளபாய் திரைப்படம் தான் இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் படம்.

அதன் பிறகு, கடந்த 2014 ஆம் ஆண்டு அருள் நீதி மற்றும் பிந்து மாதவி ஆகியோர் இணைந்து நடித்த ஒரு கண்ணியும் மூணு கலவாணிகளும் என்ற படத்தை இயக்கி இருந்தார்..

கடைசியாக இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் உச்சகட்ட நடிகரான தளபதி விஜய்-யை வைத்து புலி திரைபடத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் 2015 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது.

புலி படத்திற்க்கு பிறகு இயக்குனர் சிம்பு தேவன் படங்கள் எதும் இயக்காமல் இருந்து வந்தார்.

தனது ஆறு வருட நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஆந்தலாஜி திரைபடமான கசட தபர திரைபடத்தை இயக்கியுள்ளார்.

இத்திரைபடம் கடந்த ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியானது. இதில் வரும் ஆறு கதைகளுமே இயக்குனர் சிம்பு தேவன் இயக்கியுள்ளார்.

படத்திற்க்கு ஆறு இசமைப்பாளர்கள், ஆறு ஒளிபதிவாளர்கள், ஆறு எடிட்டர்கள் என அட்டகாசமாக படம் தயாராகி வெளிவந்து ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இயக்குனர் சிம்பு தேவனை பாராட்டிய பாரதிராஜா

இதனிடையே தமிழ் சினிமாவில் இயக்குனர் இமையம் என்றழைக்கபடும் இயக்குனர் பாரதிராஜா சிம்பு தேவனுக்கு வாழ்த்து கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் குறிபிட்டு இருப்பதாவது :

திரைபடங்களை தியேட்டரில் ரசிகர்கள் பார்வைக்கு எடுத்து செல்வதில் தற்போது வணிகம் சார்ந்த பெரும் நெருக்கடியும், சவால்களும் நிறைந்துள்ளது.

ஆனால் படைப்பாளி என்பவன் ஏதோ ஒரு ஊடங்கத்தின் வாயிலாகவோ தன் படைப்புகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்று கலைக்காக அவன் தன் வாழ்க்கையே அற்பணிக்கின்றான்.

உண்மையான கலைஞனுக்கு பொருளாதாரம் இரண்டாம் பட்சமாக காண்கிறேன். கொரோனா காலத்தில் நெருக்கடியான இந்த சூழ்நிலையில் சிறந்த கலை நுட்ப

எழுத்தாளன் இயக்குனர் திரு. சிம்பு தேவன் எழுதி இயக்கியுள்ள கசட தபர தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன் நானும் பார்த்தேன் மிக சிறந்த திரைப்படம் ஆறு ஆத்தியாயங்கள் ஒவ்வொரு அத்தியாயமும் மிக நேர்த்தியான திரைக்கதையும், சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு செதுக்கபட்டுள்ளது..

ஆறு எடிட்டர்கள், ஆறு இசையமைபாளர்கள், ஆறு ஒளிபதிவாளர்கள், ஆறு கதைகள் ஆனால் ஒரே நேர்கோட்டில் மிகசிறப்பான திரைக்கதை எழுதி இயக்கிய சிம்பு தேவன்

அவர்களுக்கும், தயாரிப்பாளர் வெங்கட் பிரபு, ரவிசந்திரன், தொழிநுட்ப கலைஞர்கள், நடிகர் நடிகைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என தனது அறிக்கையில் குறிபிட்டுள்ளார்.

இதற்க்கு இயக்குனர் சிம்பு தேவன் எங்களை தோள் தொட்டு பாராட்டிய எங்கள் தந்தை இயக்குனர் இமையம் பாரதிராஜா அவர்களுக்கு எங்களின் மன்மார்ந்த நன்றிகள் என தெரிவித்துள்ளார்.

இயக்குனர் இமயம் பாரதிராஜா வெளியிட்டுள்ள முழு அறிக்கை கீழே கொடுக்கபட்டுள்ளது:

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !