காத்துவாக்குல ரெண்டு காதல் டூ டூ டூ பாடல்
Last Updated on September 19, 2021 by Dinesh
காத்துவாக்குல ரெண்டு காதல் டூ டூ டூ பாடல் இன்று அதிகாரபூர்வமாக இணையத்தில் வெளியானது…

இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த தானா சேர்ந்த கூட்டம் படத்திற்க்கு காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இரண்டாவது முறையாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இதற்க்கு முன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் நானும் ரவுடி தான் திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது..
இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் வித்தியாசமான நடிப்பு ரசிகர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
நானும் ரவுடி படத்தின் மூலம் முதன் முறையாக நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் கூட்டணியில் வெளிவந்த இத்திரைபடம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படமும் வெற்றியும் பெற்றது.
இதை தொடர்ந்து தற்போது ஐந்து வருடம் கழித்து மீண்டும் இயக்குனர் விக்னேஷ் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோரது கூட்டணி மீண்டும் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் மூலம் இணைந்துள்ளது.
காத்துவக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி மட்டுமல்லாது நடிகை சமந்தாவும் இப்படத்தில் இணைந்து நடித்திருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதாக நிலவி வருகிறது.
இப்படத்தின் படபிடிப்பு பணிகள் கடந்த வருடம் ஆரம்ப கால கட்டத்தில் தொடங்க இருந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தது.
பின்னர் தளர்வுகள் அமலுக்கு வந்த பின் படத்தின் படபிடிப்பு பணிகள் ஆண்டின் இறுதியில் தொடங்கியது. முதற்கட்ட படபிடிப்புகள் சென்னை மற்றும் ஹைத்ராபாத்தில் நடந்து முடிந்தது.
இதனை அடுத்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் முதல் பாடல் கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி காதலர் தினத்தை ஒட்டி ரெண்டு காதல் என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது..
மேலும், இப்படத்தின் இரண்டாம் கட்ட படபிடிப்பு பாண்டிச்சேரியில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்று வந்தது.
அப்போது நடைபெற்ற படபிடிப்பு காட்சிகள் இணையத்தில் லீக் ஆகி சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை கிளப்பியது.
காத்துவாக்குல ரெண்டு காதல் டூ டூ டூ பாடல்
தற்போது இப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு சில தினங்களுக்கு முன் படக்குழு அறிவித்து இருந்தது. அந்த அறிவிப்பில் இசையமைப்பாளர் அனிருத் இசையில் காத்துவாக்குல ரெண்டு காதல்
படத்தின் இரண்டாவது பாடல் செப்டெம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் என அந்த அறிவிப்பில் குறிப்பிட்டு இருந்தது.
அதன் படி, இன்று படத்தின் இயக்குனர் விக்னேஷ் பிறந்தநாளை முன்னிட்டு காத்துவாக்குல ரெண்டு காதல் டூ டூ டூ பாடலை (september 18 ) இன்று அதிகாரபூர்வமாக வெளியானது.
இரண்டு நிமிடம் ஐம்பந்தைந்து வினாடிகள் நிறைந்த இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் இசையில் அனிருத், சுனிதி சௌகன், சஞ்சனா கல்மஞ்சே ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.
இதனை தொடர்ந்து kaathuvaakularendukadhal, TwoTwoTwo, என்ற ஹஸ்டாக் மூலம் ட்விட்டரில் தற்போது இதனை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தும் வருகின்றனர்.