விக்ரம் படத்தின் அடுத்த பாடல் எப்போ ரிலீஸ்

விக்ரம் படத்தின் அடுத்த பாடல் ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளது விக்ரம் படத்தின் படக்குழு…

விக்ரம் படத்தின் அடுத்த பாடல் எப்போ ரிலீஸ்
kamal haasan

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்கும் விக்ரம் திரைபடத்தின் அடுத்த பாடல் இன்று ( 25-05-2022 ) காலை 11.00 மணிக்கு வெளியாக உள்ளது..

ஏற்கனவே இப்படத்தின் ட்ரைலர் இணையத்தில் அதிகாரபூர்வமாக வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. இதை தவிர விக்ரம் படத்தில் கமல் ஹாசன் எழுதி பாடிய பாடல் பத்தல பத்தல ( pathala pathala ) இந்த பாடலானது தற்போது வரை இணையத்தில் சக்க போடு போட்டு வருகிறது..

சமீபத்தில் தான் விக்ரம் படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியமில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ், விஜய் சேதுபதி, உதய்நிதி ஸ்டாலின், சிலம்பரசன், இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்..

இதை தொடர்ந்து வரும் ஜூன் 3 ஆம் தேதி விக்ரம் திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில் விக்ரம் படத்தின் ஒரு அப்டேட்டை ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளது படக்குழு..

விக்ரம் படத்தில் இடம் பெற்றுள்ள போர்கண்ட சிங்கம் என்ற லிரிகள் வீடியோ பாடல் இன்று ( 25-05-2022 ) காலை 11.00 மணி அளவில் இணையத்தில் வெளியிட உள்ளதாக விக்ரம் படத்தின் படக்குழு அறிவித்துள்ளது..

இந்த அறிவிப்பானது ரசிகர்களுக்கு உருசாகமடைந்த ரசிகர்கள் vikram என்ற ஹஸ்டாக்கை இணையத்தில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

Exit mobile version