kasada Tabara :எனக்கென்ன ஆச்சு பாடல் ரிலீஸ்…

kasada Tabara :எனக்கென்ன ஆச்சு என்ற பாடல் கசட தபர படத்தின் ஆறாவது பாடலாக இன்று வெளியானது…

kasada Tabara :எனக்கென்ன ஆச்சு பாடல் ரிலீஸ்...
kasada tabara

இயக்குனர் சிம்பு தேவன் கடந்த 2015 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த புலி படத்தை இயக்கினார். அதன் பிறகு தற்போது ஆந்தலாஜி படமாக கசட தபர படத்தை இயக்கி உள்ளார்..

இப்படம் ஆறு ஒளிபதிவாளர்கள், ஆறு எடிட்டர்கள், ஆறு இசையமைப்பாளர்கள் என அட்டகாசமான ஆந்தலாஜி படமாக இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகி வந்துள்ளது.

ஆந்தலாஜி படமான கசட தபர படத்தில் வரும் ஆறு கதைகளையும் இயக்குனர் சிம்பு தேவன் மட்டும் இயக்கி உள்ளார். இதற்க்கு முன் தமிழில் வெளியான ஆந்தலாஜி படங்களான நவரசா, புத்தம் புது காலை, பாவகதைகள் ஆகிய திரைப்படங்களில் வரும் கதைகளை வெவ்வேறு இயக்குனர்கள் இயக்கி இருந்தனர்.

kasada tabara Movie cast

இந்த திரைபடத்தை பொறுத்த வரையில் இதில் இடம் பெற்று இருக்கும் ஆறு கதைகளும் இயக்குனர் சிம்பு தேவன் மட்டும் இயக்கி உள்ளார் என்பது குறிபிடத்தக்கது.

கசட தபர படத்தில் சாந்தனு பாக்கியராஜ், பிரேம்ஜி அமரன், சுந்தீப் கிஷான், ஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர், ரெஜினா கேசாண்ட்ரா,

வெங்கட் பிரபு, விஜியலக்ஷ்மி, ஜனனி ஐய்யர், சாந்தனி தமிழரசன், அரவிந்த் ஆகாஷ், சென்றாயான் என ஏராளமானோர் இதில் நடித்துள்ளனர்.

படத்தின் ஒளிப்பதிவாளர்களாக விஜய் மில்டன், எம்.எஸ்.பிரபு, பாலசுப்ரமணியம், எஸ். ஆர். கதிர், ஆர்.டி. ராஜசேகர், சக்தி சரவணன் என ஆறு ஒலிபாதிவாளர்கள் இப்படத்தில் பணியாற்றி உள்ளனர்.

இப்படத்தின் எடிட்டர்களாக ஆண்டனி, பிரவீன் கே.எல், விவேக் ஹர்ஷன், மூ. காசி விஸ்வநாதன், ராஜா முஹ்ம்மெத், ரூபன் ஆகிய எடிட்டர்கள் கசட தபர படத்திற்க்கு எடிட்டிங் பணிகளை செய்துள்ளனர்.

மேலும் இதில் மற்றும் ஒரு அம்சமாக கசட தபராவில் இடம் பெற்றுள்ள ஆறு கதைகளுக்கு ஆறு இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர்.

அவர்கள், யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், ஸீன் ரோல்டன், சாம் சி.எஸ், பிரேம்ஜி அமரன் ஆகிய இசையமைபாளர்கள் படத்தின் கதைகளுக்கு இசையமைத்துள்ளனர்.

kasada Tabara :எனக்கென்ன ஆச்சு பாடல் ரிலீஸ்

இந்த படத்தின் ஐந்து பாடல்கள் ஏற்கனவே வெளியான நிலையில் இன்று மற்றும் ஒரு பாடலாக எனக்கென்ன ஆச்சு பாடல் ஆறாவதாக தற்போது வெளியாகி உள்ளது..

எனக்கென்ன ஆச்சு பாடலுக்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பாடலாரிசியர் சினேகன் இந்த பாடலை எழுதி உள்ளார்.

படத்தின் டீசர் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி எல்லோரது கவனத்தையும் தற்போது வெகுவாக ஈர்த்து வருகிறது.

கசட தபர டீசர் யுட்யூப் தளத்தில் இது வரை 1.3 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது..

இந்த படத்தின் டீசர் வெளியான நாள் முதலில் இருந்து படத்தின் மீதான ஆர்வமும், எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

இப்படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் ஆர். ரவீந்திரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளமான சோனி லைவ் தளத்தில் வெளியாக உள்ளது.

Exit mobile version