சூர்யா பிறந்தநாளுக்கு வெற்றிமாறன் கொடுத்த சர்ப்ரைஸ்
Last Updated on June 5, 2021 by Dinesh
சூர்யா பிறந்தநாளுக்கு வெற்றிமாறன் கொடுத்த சர்ப்ரைஸ் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் சமூக வலை தளங்களில் #Happybirthdaysuriya என்ற ஹஷ்டாக்கை டிரென்ட் செய்தும் வந்தனர்.
நடிகர் சூர்யா இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாயின அதை உறுதி செய்யும் வகையில் படத்தின் டைட்டிலயும் படக்குழுவினர் இன்று வெளியிட்டனர்.

தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கிய அசுரன் திரைப்படம் திரைக்கு வந்து மிக பெரும் வெற்றி பெற்றது. திரை அரங்கு கலெக்ஷன்களிலும் இத்திரைபடம் பெரும் வசூலை அள்ளி குவித்தது.
நடிகர் தனுஷ் முதன் முறையாக வயதான கேரக்டரில் இப்படத்தில் தான் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் தனுஷ் தனது அசுர நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் மேலும் இதில் தனுஷ் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் சிவசாமி ஆகும்.
படத்தை திரையில் பார்க்கும் பொழுது நடிகர் தனுஷ் சிவசாமியாகவே வாழ்ந்து இருக்கிறார் என்ற உணர்வை படம் பார்க்கும் அனைவரது மனதில் உணர்த்தியது..
இத்திரைபடத்தை தமிழ் சினிமா இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என அனைவராலும் பெரிதும் பாராட்டை பெற்றது. அசுரன் திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு மையில் கல் என்று சொன்னால் நிச்சயம் அது மிகையாகாது..
சூர்யா பிறந்தநாளுக்கு வெற்றிமாறன் கொடுத்த சர்ப்ரைஸ்
இந்த வெற்றி படத்தை அடுத்து இயக்குனர் வெற்றி மாறன் தனது அடுத்த படத்தை நடிகர் சூர்யாவை வைத்து இயக்குகிறார்..
இயக்குனர் வெற்றி மாறன் தனுஷை மட்டும் வைத்து படங்களை இயக்கி வந்த நிலையில் தற்போது முதன் முறையாக சூர்யாவை வைத்து இயக்குகிறார்.
நடிகர் சூர்யாவும் இயக்குனர் வெற்றி மாறனும் இணைந்து இருக்கும் படத்திற்க்கு வாடிவாசல் என பட தலைப்பை வைத்துள்ளனர்.
மதுரையில் உள்ள வாடிவாசல் ஜல்லிகட்டுக்கு மிகவும் பேர் போன ஊர் என்பதனால் இப்படம் ஜல்லிகட்டு குறித்து கதையாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுடையே நிகழ்கிறது.
இதை தொடர்ந்து ரசிகர்களும் வாடிவாசல் என்ற ஹேஸ்டாக்கை சமூக வலைத் தளத்தில் டிரென்ட் செய்து வைரலாக்கி வருகிறார்கள்.
தற்போது நடிகர் சூர்யா பிறந்த நாளுக்கு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் எனும் திரைபடத்தின் முதல் போஸ்டரை இன்று வெற்றிமாறன் வெளியிட்டார்.
இந்த பஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் சூர்யா ஜல்லிகட்டு காலைகளை அடக்கும் வீரர்கள் அணியும் பனியன் போன்று இவரும் அணிந்திருப்பதால் வாடிவாசல் படத்தில் நடிகர் சூர்யா ஜல்லிகட்டு காலைகளை அடக்கும் வீரராக வலம் வருகிறார் என்ற சந்தேகம் ரசிகர்களுடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யா பிறந்தநாளுக்கு வெற்றிமாறன் கொடுத்த சர்ப்ரைஸ் இது ரசிகர்கள் எதிர்பாராத மகிழ்ச்சிய கொடுத்தது மேலும் வாடிவாசல் போஸ்டரை இணையத்தில் தொடர்ந்து வைரலாக்கி டிரென்ட் செய்து வருகின்றனர்.
இயக்குனர் வெற்றிமாறன் ‘அசுரன்’ திரை படத்தின் வெற்றிக்கு பிறகு சூர்யாவை வைத்து ‘வாடிவாசல்’ திரைப்படத்தை இயக்குகிறார்.
இப்படத்தின் மூலம் வெற்றிமாறன் சூர்யா-வுடன் முதன் முறையாக இணைந்திருக்கிறார் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுக்கும் வெற்றிமாறன் உடன் சூர்யா இணைந்து இருப்பது அவருடைய ரசிகர்கள் வாடிவாசல் திரைப்படத்தை ஆர்வமாக எதிர்பார்த்துள்ளனர்.