‘தமிழனென்று சொல்லடா’ பூமி பாடல் வெளியானது.
Last Updated on July 29, 2021 by Dinesh
தமிழனென்று சொல்லடா பூமி பாடல் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இதனை ஜெயம் ரவி ரசிகரகள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த வருடம் 2019-ல் ஜெயம் ரவி நடித்து வெளிவந்த கோமாளி திரைப்படம் வெற்றி பெற்றது. இதனை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தை இயக்கி இருந்தார்.
ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து இருந்தார் மேலும் இப்படத்தில் யோகி பாபு , கே.எஸ்சம்யுக்தா ஹட்கே, வினோதினி உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.
இப்படத்தில் ஜெயம் ரவி பள்ளியில் படிக்கும் போது விபத்து ஒன்றில் சிக்கி தலையில் காயமடைந்து கோமாவுக்கு சென்று விடுகிறார் கோமா நிலைக்கு சென்ற தன் நண்பனை யோகி பாபு கவனித்து வருகிறார்.
90’s- ல் கோமா நிலைக்கு சென்ற ஜெயம் ரவி ஒரு கட்டத்தில் கோமா நிலையில் இருந்து வெளியே வருகிறார். தற்போது (20’s) கால கட்ட நிலையை கண்டு வியப்படைகிறார் தான் பார்க்கும் எல்லாமே புதியதாக உணர்கிறார்.
மேலும் கோமாவில் இருந்ததால் தமக்கு ஏற்பட்ட நிலையை சமாளித்து வாழ்க்கையில் எப்படி ஜெயிக்கிறார் என்பதை பற்றிய கதையாகும்.
இப்படத்தை ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ளார் ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார் இப்படம் 100 நாட்கள் கடந்து வெற்றி பெற்றது.
‘தமிழனென்று சொல்லடா’ பூமி பாடல் வெளியானது.
இதனை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்து வரும் திரைப்படம் ‘பூமி’ இப்படத்தை ரோமியோ ஜூலியட், போகன், உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் லக்ஷ்மன் இயக்குகிறார் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார்.
மேலும் இப்படத்தில் தம்பி ராமையா, ராதா ரவி, சரண்யா பொன்வண்ணன், சாக்ஷி ட்விவேதி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்
இப்படத்தின் பஸ்ட் லுக் மற்றும் ட்ரைலர் ஏற்கனவே வெளியே வந்து நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரில் ஜெயம் ரவி விவசாயிகளின் மத்தியில் தலைப்பாகையுடன் நிற்ப்பது போன்று போஸ்டர் வெளியானது
இதனை கண்ட அவரது ரசிகர்கள் இப்படம் விவசாயம் சார்ந்த படமாக இருக்கும் என எதிர்பார்த்து உள்ளனர்.
எனவே தற்போது பூமி படத்தின் படக்குழு ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஊட்டும் விதமாக பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது இதன் அறிவிப்பை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு இருந்தது.
அதில் செப் 10-ம் தேதி ஜெயம் ரவி பிறந்த நாளை முன்னிட்டு பூமி படத்தின் ‘தமிழனென்று சொல்லடா’ எனும் பாடல் வெளியாகும் என அறிவித்து இருந்தது.
‘தமிழனென்று சொல்லடா’ பூமி பாடல் இணையத்தில் வெளியிட்டது பாடல் வெளியான சிறிது நேரத்தில் ரசிகர்கள் ஆவலுடன் கேட்க தொடங்கிவிட்டனர்.
இப் பாடலை இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.
மேலும் இப்படம்இந்த வருடம் மே மதம் திரைக்கு வர இருந்த நிலையில் கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் தியட்டர்கள் மூடப்பட்டு இருக்கின்றது.
இதன் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்து இருக்கிறது படக்குழு. பூமி திரை படத்தை சுஜாதா விஜய குமார் தயாரித்து உள்ளார்.