Thiruchitrambalam : நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் படம் திரை அரங்கில்
Last Updated on August 19, 2022 by Dinesh
நடிகர் தனுஷ், நித்யா மேனன், ராசி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்த திருச்சிற்றபலம் திரைப்படம் இன்று திரை அரங்குகளில் வெளியாகியுள்ளது..

நடிகர் தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, குட்டி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் ஜவஹர் மூன்றாவது முறையாக தனுஷை வைத்து திருச்சிற்றபலம் படத்தை இயக்கியுள்ளார்..
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கும் இந்த படத்தில் தனுஷ், ராசி கண்ணா, நித்யா மேனன்,
ப்ரியா பவானி சங்கர், பாரதி ராஜா, முனிஷ் காந்த் உள்ளிட்ட பல முக்கிய நடிகர் நடிகைகள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்..
இந்த படத்தின் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ள அனிருத் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தனுஷ் மற்றும் அனிருத் ரவிசந்திரன் கூட்டணி திருச்சிற்றபலம் படத்தின் மூலம் இணைந்து இருப்பது ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது..
கடந்த ஆண்டு (2021) ஆகஸ்ட் 5 ஆம் தேதி சென்னையில் பூஜையுடன் தொடங்கிய திருச்சிற்றபலம் படபிடிப்பு கடந்த ஒரு வருட காலமாக சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கபட்டுள்ளது..
திருச்சிற்றபலம் படத்தின் ரிலீஸ் குறித்து தனுஷ் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்பார்த்து இருந்தனர் காரணம் கடந்த 2021 ஆண்டு வெளிவந்த கர்ணன் திரைப்டத்திற்க்கு பிறகு தனுஷ் நடித்த தி கிரே மேன், ஜகமே தந்திரம், அந்த்ராங்கி ரே உள்ளிட்ட படங்கள் திரை அரங்கில் வெளியாகமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது..
ஆனால், தற்போது திருச்சிற்றபலம் திரைப்படம் இன்று ஆகஸ்ட் 18 (2022) உலகம் முழுவதிலும் உள்ள திரை அரங்குகளில் வெளியாகி உள்ளது..
இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் உள்ள திரை அரங்குகளில் தனுஷ் ரசிகர்கள் திருச்சிற்றபலம் படத்தினை பார்க்க திரை அரங்குகளில் குவிந்த வண்ணம் உள்ளனர்.