Last Updated on December 9, 2022 by Dinesh
எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் குமார் நடித்த துணிவு படத்தின் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது…

இயக்குனர் எச். வினோத், தயாரிப்பாளர் போனி கபூர், நடிகர் அஜீத் குமார் ஆகியோர் மூன்றாவ்து முறையாக இணையும் திரைப்படம் துணிவு.
இதற்கு முன் இவ் மூவரது கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட படங்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது..
அதனை தொடர்ந்து, தற்போது துணிவு படத்தின் மூலம் மூன்றாவது முறையாக அஜீத், எச்.வினோத், போனி கபூர் ஆகியோரது கூட்டணி அமைந்துள்ளது.
அஜித்தின் 61 வது படமான துணிவு படத்தினை எச்.வினோத் இயக்குகிறார் படத்தினை பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார்..

இசையமைப்பாளர் ஜிப்ரான் துணிவு படத்திற்க்கு இசையமைக்க, படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா பணியாற்றியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய துணிவு படத்தின் படபிடிப்பு ஹைத்ராபாத்தில் முதற் கட்ட படபிடிப்பினை நிறைவு செய்தது..
பின்னர், சென்னை, விசாகப்பட்டிணம், பேங்காக் உள்ளிட்ட நகரங்களில் படமாக்கபட்டுள்ளது.
இந்த படத்தில் அஜீத்துடன் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்..
மேலும், சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலியாக நடித்து பிரபலமான ஜான் கொக்கின், சமுத்திரகனி, மஹாநதி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இவர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அமீர் மற்றும் பவனி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்..
துணிவு படத்தின் தமிழக திரை வெளியீட்டு உரிமையை உதய்நிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைபற்றியுள்ளது.

இதை தவிர்த்து மொத்த வெளிநாட்டு திரை வெளியீட்டு உரிமத்தை லைகா நிறுவனம் கைபற்றியுள்ளது..
தற்போது, துணிவு படத்தின் முதல் பாடலாக சில்லா சில்லா பாடல் யுட்யூப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஜிப்ரான் இசையில் வைசாக் எழுதியுள்ள சில்லா சில்லா பாடலை அனிருத் ரவிசந்திரன் பாடியுள்ளார்..
“நம்மாண்டே சீனா டைம் வராது டா போனா
இஷ்டபட்டு கஷ்ட்டபட்டா எல்லாம் வரும் தானா
மத்தவன மட்டம் தட்டி மேல வந்து நோ யூஸ்” போன்ற அதிரடியான வரிகளுடன் பாடல் வெளியாகியுள்ளது..
கீழே சில்லா சில்லா பாடல் கொடுக்கபட்டுள்ளது பார்த்து மகிழுங்கள்