பொன்னியின் செல்வன் பாகம் 1 செம அப்டேட்
Last Updated on June 9, 2022 by Dinesh
பொன்னியின் செல்வன் பாகம் 1 செம அப்டேட் இன்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் வெளியானது…

இந்திய சினிமாவில் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன்..
பிரபல நாவலான பொன்னியின் செல்வன் கதையை மையமாக கொண்டு இத்திரைப்படம் உருவாகி வருகிறது..
இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் பார்க்கபடுகிறது.
இத்திரைபடத்தை பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகியோர் இணைந்து படத்தினை தயாரிக்கிறது.
மேலும் இப்படத்திற்க்கு வலு சேர்க்கும் விதமாக இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்..
பொன்னியின் செல்வன் cast திரைபடத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர், நடிகைகள் இணைந்து நடித்திருப்பது ரசிகர்களுக்கு இப்படத்தின் மீதான ஆர்வமும் அதிகரித்து உள்ளது.
இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன், விக்ரம் பிரபு, சரத் குமார், பார்த்திபன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளம் இத்திரைபடத்தின் மூலம் இணைந்து உள்ளனர்.
மேலும், இத்திரைபடத்தில் நடிகை த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.
இதில் ஐஸ்வர்யா ராய் பச்சன் நந்தினி கதாபாத்திரத்திலும் த்ரிஷா குந்தவை பிராட்டியார் காதாபாத்திரத்திலும் நடித்து அசத்தி இருக்கின்றனர்..
இரண்டு பாகங்களாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் பாகம் 1 மற்றும் பாகம் 2 என படத்தினை எடுக்க ஏற்கனவே திட்டமிடபட்டது. இவற்றில் பாகம் 1 திரைப்படம் வெளியீட்டுக்கு பின்னர் பாகம் 2-ன் படபிடிப்பு பணிகள் தொடங்க உள்ளன.
படத்தின் பாகம் 1- ன் குறித்த தகவல்கள் இது வரையில் ஏராளமாக வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது பாகம் 1 குறித்த சூப்பரான அறிவிப்பு வெளியாகியுள்ளது..
பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைபடத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் அதிரடியாக இன்று வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளனர் படக்குழுவினர்.
படத்தில் விக்ரம், த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோரது பஸ்ட் லுக் போஸ்டர்களை தனி தனியே வெளியிட்டு அசத்தியுள்ளது படக்குழுவினர்..
மேலும், இதனுடன் பொன்னியின் செல்வன் பாகம் 1 திரை அரங்கில் வெளியாகும் தேதியையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளனர்..
வரும் 2022 செப்டெம்பர் 30 ஆம் தேதி பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் திரைக்கு வருகிறது. கீழே படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் இணைக்கபட்டுள்ளது கண்டு மகிழுங்கள்..