Last Updated on August 31, 2021 by Dinesh
Bigg boss 5 Tamil : யாரும் எதிர்பாரா வண்ணம் இன்று அட்டகாசமாக வெளியானது முதல் டீசர்..

தனியார் தொழைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த 2017 செப்டெம்பர் மாதம் பிக்பாஸ் முதல் சீசன் ஆரம்பமானது. அதில் மொத்தம் 19 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
பிக்பாஸின் முதல் சீசனே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதில் கலந்து கொண்ட போட்டியாளர்களும் மிகவும் பிரபலமானார்கள், குறிப்பாக போட்டியாளர்களில் ஒருவரான நடிகை ஓவியாவுக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.
இதையடுத்து முதல் சீசன் மிக பெரிய வெற்றி அடைந்ததை அடுத்து சீசன் இரண்டு, மூன்று, நான்கு என அடுத்து அடுத்து வந்த பிக்பாஸ் சீசன்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கடந்தாண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் நான்கு கொரோனா பெருந்தோற்று காரணமாக சற்று தாமதமாக நடைபெற்றது. இயல்பாக விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் ஜூன் மாதத்தில் நடைபெறுவது வழக்கம்.
அவ்வாறு முதல் மூன்று சீசன்களும் ஜூன் மாதத்தில் துவக்கப்பட்டது. அதில் முதல் இரண்டு சீசன்கள் ஜூனில் தொடங்கி செப்டம்பர் மாதத்தில் முடிவடைந்தது.
மூன்றாவது சீசன் மட்டும் ஜூன் இறுதியில் துவக்கப்பட்டு அக்டோபர் முதல் வாரத்தில் நிறைவடைந்தது.
இதை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு துவக்கத்தில் நடைபெற இருந்த பிக்பாஸ் சீசன் நான்கு சற்று தாமதமாக அக்டோபர் மாதத்தில் ஆரம்பிக்கபட்டது.
இதற்க்கு காரணம் கொரோனா பெருந்தோற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததனால் பிக்பாஸ் போட்டியை குறிப்பிட்ட தேதியில் நடத்த முடியாமல் தள்ளி போனது.
பின்னர், கொரோனா பெருந்தோற்று குறைந்த காரணத்தால் தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்தது. அதன் பின்னர், பிக்பாஸ் சீசன் நான்கு 18 போட்டியாளர்களுடன் அக்டோபர் முதல் வாரத்தில் துவங்கியது..
அப்போட்டியில் புதியதாக சில விதிமுறைகளை அமல்படுத்தபட்டிருந்தது. அந்த விதிமுறைகளானது பிக்பாஸ் போட்டியை தொகுத்து வழங்கும் உலக நாயகன் கமலஹாசன் வாரத்தில் இரண்டு நாட்கள் போட்டியாளர்களுடன் நேரடியாக கலந்துரையாடும் போது பார்வையாளர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கபட்டது இது பிக்பாஸ் நிகழ்ச்சியில் வழக்கமான ஒன்று தான்.
ஆனால், கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கபட்டது.. இதனால் முதன் முறையாக பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி பார்வையாளர்கள் இன்றி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட 18 போட்டியாளர்களில் ஒருவரான நடிகர் ஆரி மிக பெரிய ஒரு வரவேற்பை பெற்றதுடன், ரசிகர்களின் நன்மதிப்பை பெற்று போட்டியில் வெற்றியும் பெற்றார்.
சீசன் நான்கில் கலந்து கொண்ட மற்றும் ஒரு போட்டியாளரான பாலாஜி முருகதாஸ் போட்டியில் ரன்னர் அப்பாக தேர்வு செய்யபட்டார்.
Bigg boss 5 Tamil
இதை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் சீசன் 5 கடந்தாண்டை போலவே இந்தாண்டும் அக்டோபர் மாதம் நடைபெறும் என பிக்பாஸ் ரசிகர்கள் இடையே சந்தேகம் நிலவி வந்தது.
அதை உறுதி செய்யும் வகையில் கடந்த சில நாட்களாக பிக்பாஸ் போட்டி நடைபெறும் இடங்களின் சூட்டிங் ஸ்பாட் புகைபடங்கள் சமூக வலைதளத்தில் பரவி வந்தன..
தற்போது யாரும் எதிர்பாராத விதமாக விஜய் டிவி அதிகாரபூர்வமாக பிக்பாஸ் 5 தமிழ் முதல் பிரோமோவை இன்று வெளியிட்டது. இது பிக்பாஸ் ரசிகர்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
பிக்பாஸ் சீசன் 5-இன் முதல் ப்ரோமோவில் உலக நாயகன் கமல்ஹாசன் ‘ஆரம்பிக்கலாமா’ என்ற அதிரடி வசனத்துடன் சீசன் 5-க்கான புதிய லோகோவுடன் 20 நொடிகள் அடங்கிய முதல் டீசர் தற்போது இணையத்தில் வெளிவந்து உள்ளது.
பிக்பாஸ் சீசன் 5 தமிழ் பிரோமோ கீழே கொடுக்கபட்டுள்ளது :