இடி, மின்னலின் போது இதை கண்டிப்பா செய்யாதீங்க?

இடி, மின்னலின் போது இதை எல்லாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டியது மிக அவசியமாக உள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்…

இடி, மின்னலின் போது இதை கண்டிப்பா செய்யாதீங்க?
இடி, மின்னல்

மழை காலங்களில் மழையில் நனைவதும், மழையை ரசிப்பதும் ஒரு வித தனி அலாதி தான். ஆனால் மழையை ரசிக்கும் போது சில நேரங்களில் இடி, மின்னல்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள மறந்து விடுகிறோம்.

இடி, மின்னல் தாக்குதலில் இருந்து நம்மை தற்காத்து கொள்ள சில வழிமுறைகளை மழை காலங்களில் நாம் தவறாமல் கடைபிடிப்பது சிறந்தது.

பருவ மழை காலத்தில் இடி மற்றும் மின்னல் தாக்கி தமிழகத்தில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது..

இதனிடையே, தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக திருச்சி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய பத்து மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

இடி, மின்னலின் போது இதை செய்யக்கூடாது

எனவே, மழை காலங்களில் இடி, மின்னல் பற்றிய விழிப்புணர்வுகளுடன் செயல்படுவது நல்லது. மழை நேரத்தில் பொது வெளியில் நிற்பதை தவிர்த்து விடவும், மரத்தின் அடியிலோ, செல்போன் டவரின் பக்கதிலோ நிற்பதை தவிர்க்கவும்..

செய்ய கூடாதவை:

உலோக குழாய்களில் மின்னல் பாயும் என்பதனால், மின்னல் தாக்குதல் நேரங்களில் குளிப்பதை தவிர்ப்பது நல்லது.

மேலும், ஓடும் நீரோடைகள், தண்ணீர் தேங்கும் இடங்களில் விலகி இருக்க வேண்டும்.

கதவுகள், ஜன்ன்ல்கல், நெருப்பு மூட்டபடும் இடங்கள், அடுப்புகள்,குளியல் தொட்டிகள் என மின்சாரம் பாயும் பொருட்களில் இருந்து விலகி இருக்கவும்.

மின்னலின் தாக்குதல் நேரடியாக தரையில் இருப்பதால் அப்போது தரையில் சமமாக படுக்க கூடாது.

ரப்பர் செருப்புகள் மற்றும் கார் டயர்கள் மின்னல் தாக்குதலின் போது பாதுகாப்புக்கு உதவாது என்பதினால் அவற்றினை அப்போது பயன்படுத்த வேண்டாம்.

மின்னல் தாக்குதலின் போது தொலைபேசி மற்றும் மின் சாதனங்களை உபயோகிப்பதை தவிர்க்கவும்.

கம்பி வேலிகள் பக்கத்தில் நிற்பதும், மரங்களுக்கு கீழ் நிற்பதும் தவிர்க்க வேண்டும். மலை உச்சிகள் மீது நிற்க கூடாது.

வாகனங்களின் ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும், மரங்கள் மற்றும் மின் இணைப்பு கம்பங்கள் பக்கத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்..

வீட்டிற்குள் இருக்கும் போது செய்ய வேண்டியவை : .

இடியுடன் கூடிய சத்ததை நீங்கள் கேட்கும் போது மின்னல் தாக்கும் இடத்தின் மிக அருகில் இருப்பதை உணர்ந்து செல்போனில் சார்ஜ் போடுவதை தவிர்க்கவும், தேவையற்ற மின் சாதனங்களின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்.

இடியுடன் கூடிய கனமழையில் வெளியில் செல்வதை தவிர்த்து வீட்டிற்குள்ளே இருக்க வேண்டும். முடிந்த வரை பயணம் ஏதும் மேற்கொள்ளமல் தவிர்ப்பது சிறந்தது.

வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடி வைக்கவும், கால்நடைகள் வீட்டின் உட்புறம் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

வெளியில் இருக்கும் போது செய்ய கூடியவை :

மின்னல் நேரத்தில் உலோக கட்டமைப்புகளையும், கட்டுமானங்களையும்,உலோக தகடு கொண்ட தங்கும்மிடங்கள் செல்வதை தவிர்க்கவும்.

இடியுடன் கூடிய பெருத்த சத்தம் காதை கிழிக்கும்வாரு கேட்கும் போது, இரண்டு கைகளாலும் காதினை அழுத்தி மறைத்து குதி கால்களை ஒன்று சேர்த்து தலை குனிந்து தரையில் பதுங்குவது போன்று அமர்ந்து கொள்ள வேண்டும்.

வெள்ள பாதிப்பிற்க்கு உள்ளாகதா இடம் என்பதினை உறுதி செய்து அந்த இடத்தில் பாதுகாப்பாக தங்க வேண்டும்.

Exit mobile version