NewsTamilnadu

கொரோனா தடுப்பூசி நாடு முழுவதும் துவக்கினார்- பிரதமர்…

கொரோனா தடுப்பூசி நாடு முழுவதும் இன்று முதல் தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி..

கொரோனா தடுப்பூசி நாடு முழுவதும் துவக்கினார்- பிரதமர்...
covid-19

உலகெங்கும் உள்ள மக்களை அச்சுறுத்தி பரவி வந்த கொரோனா வைரஸ் கடந்த மார்ச் மாதம் இந்தியாவிலும் பரவியது. இதனால் நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை அமலுக்கு கொண்டு வந்தது.

எட்டு மாத காலங்களாக கட்டுபாடுகளுடன் கூடிய ஊரடங்கினால் கொரோனா தொற்று அதிக அளவு பரவுவதை தடுத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஆனால், ஊரடங்கு காலங்களில் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள் பின்னர் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கில் படி படியான தளர்வுகளை கொண்டு வந்தது.

கொரோனா மருந்து

தற்போது, கொரோனாவிற்கு தடுப்பு மருந்தை இந்தியாவிலே தயாரித்துள்ளது இந்திய அரசாங்கம். ஏற்கனவே ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வரும் என அறிவிப்புகள்

வெளிவந்த நிலையில் இன்று நாடு முழுவதும் தடுப்பூசி போதும் பணியை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். covid vaccine

கொரோனா தடுப்பூசி

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க உலகம் முழுவதும் 5கும் மேற்பட்ட தடுப்பூசிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்திய நிறுவனங்களான பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகளை அவசர கால பயன்பாடுகளுக்கு பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.

இரண்டு தடுப்பூசிகளும் புனேவில் உள்ள ஆய்வகங்களிலிருந்து நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கபட்டது. இதனை தொடர்ந்து இன்று காலை 10.30மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் தடுப்பூசி போடும் பணியை துவக்கி வைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி

கொரோனா தடுப்பூசி நாடு முழுவதும் இன்று தொடங்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி. நம்மிடம் 2300 மருத்துவ பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன.முககவசங்கள் மற்றும் பி.பி.இ சுவாச உடைகள் தயாரிப்பில் நாம் இப்போது தற்சார்பு பெற்றுள்ளோம்.

இந்தியாவில் தய்ரித்த #madeinindia தடுப்பூசி மருந்துகளின் செயல் திறன் மற்றும் பாதுகாப்பு பற்றி நம் விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் திருப்தி தெரிவித்த பிறகே பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கபட்டிருக்கிறது.

நமது டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ அலுவலர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், துப்புரவு பணியாளர்கள், காவலர்கள் மற்றும் இதர முன்கல அலுவலர்கள் நாட்டுக்காக தங்கள் உயிரை பணயம் வைத்தனர்.

வெளிநாடு தடுப்பூசிகளை விட இந்திய தடுப்பூசிகளின் விலை மிக குறைவு. ஆனால், அதே அளவு வீரியமானது. வெளிநாடுகளில் ஒரு டோஸ் மருந்துக்கு ரூ.5,000 .வரை ஆகிறது அதை மைனஸ் 70டிகிரி வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டியுள்ளது..

தடுப்பூசி

வரலாற்றில் இதற்கு முன் எப்போதும் இவ்வளவு பெரிய தடுப்பூசி இயக்கம் நடைபெற்றதில்லை. 30 மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகையுள்ள 100க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன. இந்தியா முதலாவது கட்டதிலேயே 3கோடி பேருக்கு தடுப்பூசி போடுகிறது.

கொரோனா தடுப்பூசி 2டோஸ் போடுவது மிக முக்கியம் என மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். 1 மற்றும் 2வது டோஸ்களுக்கு இடையில் 1மாத இடைவெளி இருக்கும். 2வது டோஸ் போட்டு 2வாரம் களிது தான் உடலில் கொரோனாவுக்கு எதிரான சக்தியை உருவாக்கும்.

இரண்டாவது கட்டத்தில் 30கோடி பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் முதியவர்கள், தீவிர உடல் நல குறைவு உள்ளவர்ககளுக்கு அப்போது தடுப்பூசி போடபடும்.

மேலும், அவர் கூறியதாவது தடுப்பூசி போடும் செயல்பாடு முழுக்க cowin app மூலமாக நடைபெறும் என தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !