Last Updated on October 12, 2024 by Dinesh
செந்தில் பாலாஜி ஜாமீன் மீண்டும் அமைச்சர் பதவி என அடுத்தடுத்து வெளியாகும் அறிவிப்புகளால் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்..
மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2023 ஜூன் மாதம் 14 ஆம் தேதி மத்திய அமலாக்க துறை கைது செய்தது..
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் சிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வேண்டி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதி மன்றம், உச்ச நீதிமன்றம் என தொடர்ச்சியாக மனுக்களை அளித்த வந்த பின்பும்,
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு நிராகரிக்கபட்டு வந்தது. இந்த நிலையில் சிறையில் ஓராண்டுக்கும் மேலாக சிறைவாசத்தை கடந்துவிட்ட செந்தில் பாலாஜி மீண்டும் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடி இருந்தார்..
கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி இந்த மனு மீதான இறுதி விசாரணை உச்ச நீதமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஒஹா, அகஸ்டின் ஜார்ஜ் நடைபெற்று அதன் தீர்ப்பை செப்டெம்பர் 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்..
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று ( 26.09.2024) காலை சுமார் 10.30 மணியளவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஒஹா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறபித்தது..
senthil bajaji திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்க துறை அலுவலகத்தில் கையெழுத்து போட வேண்டும், சாட்சிகளை கலைக்க எந்தவித முயர்ச்சியும் மேற்கொள்ள கூடாது, விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் ஆஜராக வேண்டும் என நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்..
செந்தில் பாலாஜி முதல் பேட்டி
471 நாட்கள் சிறைக்கு பின்னர் வெளிய வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஊடகங்களுக்கு அளித்த பேட்டி : என் மீது அன்பும், பாசமும், நம்பிக்கையும் வைத்திருந்த கழக தலைவர் முதலமைச்சருக்கு வாழ்நாள் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்..
அரசியல் காழ்புணர்ச்சியால் என் மீது போடப்பட்ட இந்த பொய் வழக்கில் இருந்து சட்ட போராட்டம் நடத்தி மீண்டு வருவேன் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்..