Last Updated on May 28, 2021 by Dinesh
சென்னை மழை காலை முதல் கொட்டி தீர்த்த கனமழையால் சென்னையின் சாலைகளில் வெள்ளமாக மாறியது.

இன்று விடியற்காலை முதலே சென்னையில் காற்றுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது. பின்னர் தொடர்ந்து இடைவிடாது பெய்ததில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
‘நிவர்புயலுக்கு’ பின்னர் சென்னையில் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்பட்டு வந்தது. புயலின் தாக்கதிற்கு பின்பு சென்னையில் மழை பெய்வதற்கான வாய்ப்பும் குறைந்து காணப்பட்டது.
இருப்பினும் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை வந்து சென்றது. ஆனால்., நிவர்புயல் சென்னையை கடந்து சென்ற பின் ஒரு சில நாட்கள் கலித்து சென்னையில் குளிரின் தாக்கம் சற்று அதிகமாக காணபட்டது இருப்பினும் கடந்த ஒரு மாத காலமாக மழை ஏதும் பெய்யாமல் இருந்தது.
சென்னையில் மழை
சென்னை மழை காலை முதல் பெய்ய தொடங்கிய மழை இடைவிடாது தொடர்ந்து பெய்ததால் சென்னையின் சாலைகளில் வெள்ளம் ஓடியது.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமதுக்குள்ளானர்கள். ஆயினும் வெகு நாட்கள் கலித்து மழை பெய்வதால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செம்பரம்பாக்கம் அணை
தொடர் மழை காரணமாக சென்னையின் செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட எரிகளில் நீர் வரத்து அதிகமானது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர் ஆதரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் எரி 25.5ச.கீ பரப்பளவில் அமைந்துள்ளது.
ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் ’24’ அடியாகும் தொடர் கனமழையால் எரிக்கு நீர்வரத்து அதிகரித்து 23 அடியை
நெருங்குவதால் பாதுகாப்பு காரணங்களுக்கு அணையில் இருந்து 500 கன அடி உபரி நீரை இன்று மதியம் 2.00மணிக்கு வெளியேற்றுவதற்காக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
வெள்ள அபாய எச்சரிக்கை
இதனை அடுத்து அணையிலிருந்து நீர் வெளியேற்றபடுவதால் அப்பகுதி .சுற்றியுள்ள சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்மேடு, திருநீர்மலை மற்றும் அடையார் ஆற்றின் கரையோரம் வசிக்கும் இருபுறம் வசிக்கும் மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கபட்டது.
வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கபட்டு மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு அரசு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிரபித்தது.
தனியார் ஆய்வாளர்
தற்போது காலை முதல் சென்னையில் பெய்து வரும் மழை இது வரை 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னையில் இன்று பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த மாதம் நாம் 22மி.மீ மழையை பெற்றுள்ளோம். வழக்கமாக ஜனவரி மாதம் 18மி.மீ பெய்யும் மழை அளவை விட இந்த நான்கு நாட்களில் நாம் அதிகமான மழையை பெற்றுள்ளோம்.
இது இத்துடன் நின்றுவிடாது வரும் 6ஆம் தேதிக்கு மேல் 8,9 தேதிகளில் மழையின் அளவு அதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
மழையின் அளவு
1921-ம் ஆண்டு ஜனவரி மாதம் 141மி.மீ பெய்த மழை சாதனையாக இருந்தது. அதற்கு பின் 1984-ல் 34.5மி.மீ மழையும், 1985-ல் 89.6மிமீ, 1986-ல் 65.3மி.மீ,.3 1990-ல் 86.5மி.மீ, 2000-ல் 30.3மி மீ, 2017-ல் 37.3மி.மீ என மழையின் அளவு பதிவாகியுள்ளது.
தற்போது சென்னையில் 4 நாட்கள் பெய்த மழையானது 22மி.மீ மழையை பெற்றுள்ளோம்.
நேற்று இரவு மட்டும் சென்னை தரமணியில் 17மி.மீ .மழை பெய்துள்ளது ஆகவே மீதம் உள்ள இந்த ஜனவரி நாட்களை பொறுத்து இருந்து பார்ப்போம் என தெரிவித்துள்ளார்.