NewsTamilnadu

தமிழகத்தில் புதிய ஊரடங்கு கட்டுபாடுகள்…

தமிழகத்தில் புதிய ஊரடங்கு கட்டுபாடுகள் மற்றும் விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய ஊரடங்கு கட்டுபாடுகள்
lockdown 2021

கடந்த சில நாட்களாக கொரோனா இரண்டாம் அலை தமிழகத்தில் பரவலாக பரவி வருகிறது. இது முதல் அலையை விட வேகமாகவும், வீரியம் மிக்கதாகவும் இருப்பதனால் தொற்று எளிதில் ஒருவரிடம் இருந்து மற்றவரிடம் பரவும் அபாயம் உள்ளது.

இதனால், மத்திய மாநில அரசுகள் முகவசம் அணிதல், தனிமனித இடைவெளி கடைபிடித்தல், தேவையற்ற பயணங்கள் தவிர்த்தல் போன்றவற்றை மக்கள் பின்பற்ற வேண்டும் என கேட்டு கொண்டுள்ளது.

இந்த இரண்டாம் அலையானது தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொற்று வேகமாக பரவி வருகிறது.

இதனை கட்டுபடுத்துவதற்காக சம்பந்தப்பட்ட அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு கட்டுபாட்டு விதிமுறைகளை தொடர்ந்து அமல் படுத்தி வருகின்றனர். அதன் படி, ஞாயிற்று கிழமையான இன்று வட மாநிலங்களில் இன்று ஒரு நாள் முழு ஊரடங்கு அமல் படுத்தினர்.

இதனால் கடைகள் அனைத்தும் மூட பட்டு ,போக்கு வரத்துகள் ஏதும் இன்றி வட மாநில தெருக்கள், சாலைகள் என அனைத்தும் வெறிசோடி காணப்பட்டன.

தமிழகத்தில் புதிய ஊரடங்கு கட்டுபாடுகள்…

இதனை தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் கொரோனா இரண்டாவது அலையை வேகமாக பரவி வருவதால் அதை கட்டுபடுத்த புதிய கட்டுபாட்டு விதிமுறைகளை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

அதன் படி, ஞாயிற்று கிழமைகளில் மாநில முழுவதும் முழு ஊரடங்கு என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு விவரம்: :

ஊரடங்கு அமலில் இருக்கும் ஞாயிற்று கிழமை அன்று இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மற்றும்

அனைத்து கடைகளும் செயல் பட தடை விதிக்க படுகிறது தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஊரடங்கின் போது அனுமதிக்கபடுபவை

அத்தியாவசிய பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவ மனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி சேவைகள்,

அனைத்து வகையான சரக்கு வாகனங்கள், எரிபொருட்கள் எடுத்து செல்லும் வாகனங்கள், விவசாய விலை பொருட்களை எடுத்து செல்லும் வாகனங்கள் என்பவை எல்லாம் ஊரடங்கின் போது அனுமதிக்க படும் என தெரிவித்துள்ளது..

ஊரடங்கின் போது செயல்படும் உணவகங்களின் நேரம் காலை 6:00 மணி முதல் 10:00மணி வரையிலும் மாலை 6:00மணி முதல் இரவு 9:00மணி வரை பார்செல் சேவை அனுமதிக்கபடுகிறது.

இவைகள் ஜோமாட்டோ, ஸிவிக்கி போன்ற மின் விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி, மற்ற மின் விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை என தெரிவித்துள்ளது.

மேலும், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகம் ஊரடங்கு நேரத்தில் செயல்பட அனுமதி அளித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளித்துள்ளது.

ஊரடங்கு நேரத்தில் நடக்கும் திருமணம், திருமணம் சார்ந்த நிகழ்வுக்கு 100 நபர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இறப்பு சார்ந்த நிகழ்வுக்கு 50 நபர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என பல்வேறு விதிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு.

தமிழகத்தில் புதிய ஊரடங்கு கட்டுபாடுகள், விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !