NewsTamilnadu

திருமணத்தில் 50பேருக்கு மேல் அனுமதியில்லை

Last Updated on May 24, 2021 by Dinesh

திருமணத்தில் 50பேருக்கு மேல் அனுமதியில்லை? என தமிழக இந்து சமய அறநிலை துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது

திருமணத்தில் 50பேருக்கு மேல் அனுமதியில்லை
marriage

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் படி படியாக கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வருமோ என்ற அச்சம் மக்களிடையே வெகுவாக நிலவி வருகின்றது.

ஏனென்றால் இதற்க்கு முன் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று தமிழகத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு சுமார் 400 பேர் வரை பாதிக்கபட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் தொற்றால் பாதிப்படைவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மீண்டும் பரவ தொடங்கிய கொரோனா தொற்று இரண்டாவது அலையாக தமிழகத்தில் வீச தொடங்கி உள்ளது. இதனால் மீண்டும் தொற்றால் பாதிப்புக்குள்ளாவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்து சென்றது.

இதன் காரணமாக தற்போது தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரசினால் பாதிப்படைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய மாநில அரசுகள் மீண்டும் ஊரடங்கை கொண்டு வருமோ? என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வந்தது..

கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்க்கும், தொற்று அதிகளவு பரவ விடாமல் தவிர்ப்பதற்க்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இதை தொடர்ந்து கொரோனா இரண்டாம் அலையை கட்டுபடுத்துவது குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது அவர் ஊரடங்கை மீண்டும் அமல்படுத்தினால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பின்தங்கி விடும் ஆகவே ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் எதும் இல்லை என தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது கொரோனா வைரசின் இரண்டாவது அலையயை கட்டுபடுத்த மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். முக கவசம், தனி மனித இடைவெளி போன்ற .கொரோனா கட்டுபாட்டு நடைமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என கேட்டு கொண்டார்..

இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஏப்ரல் 7 ஆம் தேதியில் இருந்து கொரோனா வைரஸை கட்டுபடுத்த பல்வேறு கட்டுபாட்டு விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது.

முக கவசம் கட்டாயம் அணிதல், தனி மனித இடைவெளி கடைபிடித்தல், கூட்டம் அதிகமாக கூடும் இடங்களில் அதிகம் செல்வதை தவிர்த்தல், பொது இடங்களில் எச்சில் துப்புவதை தவிர்த்தல், தேவையற்ற பயணங்களை தவிர்த்தல் போன்ற நடைமுறைகளை அறிவித்தது தமிழக அரசு.

மேலும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் அவ்வாறு முக கவசம் அணியாமல் வெளிய வரும் நபர்களுக்கு வீதம் 200 ரூபாய் அபராதம் மற்றும் விதி மீறல் வழக்கு தொடரபடும் என அறிவிக்கபட்டுள்ளது.

திருமணத்தில் 50பேருக்கு மேல் அனுமதியில்லை

திருமணத்தில் 50பேருக்கு மேல் அனுமதியில்லை என தற்போது மற்றுமொரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது திருக்கோயிலில் நடக்கும் திருமணத்தில் 10 பேருக்கு மேல் கலந்துக்க கூடாது எனவும்.

மேலும், திருக்கோயில் மண்டபங்களில் நடக்கும் திருமணத்தில் 50 பேருக்கு மேல் கலந்து கொள்ள கூடாது எனவும்- தமிழக இந்து சமய அறநிலை துறை அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது.

இன்று மட்டும் தமிழகத்தில் கொரோனா வைரசால் 7819 பேர் பாதிப்படைதுள்ளனர். 3464பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பி உள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !