தைப்பூச திருநாளுக்கு இனி பொதுவிடுமுறை-தமிழக அரசு…

தைப்பூச திருநாளுக்கு இனி பொதுவிடுமுறை அளித்து தமிழக அரசு ஆணை பிறபித்துள்ளது.

தைப்பூச திருநாளுக்கு இனி பொதுவிடுமுறை-தமிழக அரசு...
முருகபெருமான்

வருடந்தோரம் தமிழர்கள் கொண்டாடி வரும் தைப்பூச திருவிழாவுக்கு அரசு பொதுவிடுமுறை பட்டியலில் சேர்க்க தமிழக முதல்வர் உத்தரவுயிட்டுள்ளார்.

தமிழ் கடவுகள் முருகபெருமானை சிறப்பிக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடபட்டு வருகிறது. அதில் மிக முக்கியமானது தைப்பூச திருவிழா முருகபெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் வருடந்தோரம் வெகு விமர்சியாக கொண்டாடபட்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள திருசெந்தூர், திருத்தணி, போன்ற முருகபெருமான் கோவில்களில் தைபூசத்தன்று பக்தர்கள் லட்ச கணக்கில் சென்று முருகனை வழிபட்டு வருகின்றனர்.

பக்தர்கள் ஒவ்வொரு வருடமும் முருகனுக்கு மாலை அணிந்து விரதத்தை கடைபிடித்து பழனிக்கு பாதயாத்திரையாக சென்று தங்களது பக்தியினை முருகனுக்கு வெளிபடுத்துவார்கள்.

மேலும் காவடி எடுத்தல், அலகு குத்துதல் ,மொட்டை அடித்தல், பால் குடம் எடுத்தல் என தங்களது வேண்டுதல்களை பூர்த்தி செய்து வருகின்றனர்..

தைப்பூச திருநாளுக்கு இனி பொதுவிடுமுறை-தமிழக அரசு…

தைபூசத்தை கொண்டாட லட்சக்கணக்கான பக்தர்கள் வருடந்தோரம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பழனியில் குவிகின்றனர்.

இத்தகயை சிறப்பு மிக்க முருகபெருமானின் தைபூசமானது தமிழகத்தில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளில் வெகு விமர்சியாக கொண்டாடபட்டு வருகிறது.

மலேசியா

மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோவிலுக்கு சிங்கபூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில்இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள மாரியம்மன் கோவிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று பத்து மலை முருகன் கோவிலுக்கு சென்றடைகின்றனர்.

அங்கு அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். சுங்கை பத்து எனும் ஆற்றில் குளித்து விட்டு முருகபெருமானின் கோவிலுக்கு 272 படிகள் எரி சென்று தரிசனம் செய்து வருகின்றனர் மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் தைபூசத்திற்கு அரசு விடுமுறை அளிதிருக்கிறது குறிப்பிடதக்கது.

தைப்பூசம் பொதுவிடுமுறை

தைப்பூச திருநாளுக்கு இனி பொதுவிடுமுறை வரும், 2021 ஜனவரி 28-ஆம் தேதி தைப்பூசம் கொண்டாடப்பட இருக்கிறது. அதனை முன்னிட்டு தமிழக அரசு தைபூசத்தை அரசு பொதுவிடுமுறை பட்டியலில் சேர்ப்பதற்கு உத்தரவிட்டுள்ளது.

இது முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில். தமிழ் கடவுள் முருக பெருமானை சிறப்பித்து கொண்டாடபடும் தைப்பூச திருவிழாவை பொதுவிடுமுறை நாளாக அறிவிக்கவும், இனி வரும் ஆண்டுகளில் தைப்பூச திருவிழாவை அரசுபொதுவிடுமுறை பட்டியலில் சேர்க்குமாறு உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்தார்.

முதல்வர் அறிக்கை

தமிழ் கடவுளாகிய முருகபெருமானை சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடபடும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூச திருவிழா இவ்விழா தமிழ்நாட்டில் மட்டுமின்றி கேரளா மாநிலத்திலும் சிறப்பாக கொண்டாடபடுகிறது.

இலங்கை, சிங்கபூர், மொரிஷியஸ், மலேசியா மற்றும் இந்தோனேஷியா நாடுகளிலும் வெகுவிமர்சியாக கொண்டாடபடுகிறது.

பல்வேறு மாவட்டங்களுக்கு நான் சுற்று பயணம் சென்ற போது இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாடுகளில் தைபூசத்திற்கு பொதுவிடுமுறை அளிக்கபட்டுள்ளது.

அது போன்று தமிழ்நாட்டிலும் தைப்பூச திருவிழாவிற்கு பொதுவிடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர்.

இக்கோரிக்கையை பரிசீலித்து வரும் தைப்பூச திருவிழாவிற்கு பொதுவிடுமுறை அளித்து வரும் ஆண்டுகளிலும் அரசு பொதுவிடுமுறை பட்டியலில் சேர்க்க உத்தரவிட்டுள்ளேன் என குறிப்பிட்டு இருந்தார்.

Exit mobile version