பெற்றோரை இழந்த குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து புதிய வழிகாட்டு முறைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு..

கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் பரவ தொடங்கியதில் இருந்து உயிர்ழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா முதல் அலையை விட தற்போது பரவி வரும்
இரண்டாம் அலை அதிவேகமாகவும், வீரியம் மிக்கதாகவும் உள்ளதால் கொரோனா தொற்றால் பாதிப்படைவார்களின் எண்ணிக்கை அதிகரித்து.
இதனால்,உயிர்ழப்புகள் அதிகரித்து இறந்தவர்களின் உடல்களை சுடுகாட்டில் அடக்கம் செய்ய கூட இடமில்லாமல் தவிக்கும் அவலம் ஏற்பட்டது. குறிப்பாக வடமாநிலங்கள் கொரோனாவின் கோர முகத்தால் மக்கள் மிக கடுமகையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பரவி வரும் கொரோனா இரண்டாம் அலை இளைஞர்கள், முதியவர்கள் என வயது வரம்பு இன்றி தாக்கி வருகிறது. அவ்வாறு கொரோனா தாக்கதிற்க்கு ஆளாகி உயிர் இழக்கும் பெற்றோர்களின் குழந்தைகள் நிர்கதியாய் நிற்கின்றது.
இதை தொடர்ந்து, மத்திய அரசு .கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து புதிய வழிகாட்டு வழிமுறைகளை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது..
பெற்றோரை இழந்த குழந்தைகளின் பாதுகாப்பு வழிமுறைகள்
கொரோனா தொற்றினால் உயிர் இழந்த பெற்றோர்களின் குழந்தைகளை தத்தெடுக்க பலரும் விருப்பம் தெரிவித்து வருவது சமூக வலைதளங்களில் பரவி வந்தது.
இது சட்ட நடவடிக்கைளுக்கு எதிரானது என அரசு தெரிவித்துள்ளது. இது போன்ற செயல்களுக்கு ஊக்குவிப்பதையோ, ஈடுபடுவதையோ தவிர்க்குமாறு பொதுமக்களிடம் அரசு கேட்டு கொண்டுள்ளது.
கோவிட் தொற்றினால் உயிர் இழந்தவர்களின் குழந்தைகளுக்கு சட்டப்பூர்வமாக உதவும் வழிமுறை:
சட்டம் 2015இன் (இனி சட்டம் என குறிபிடபடும்) பிரிவு 2 (14)இன் கீழ் பெற்றோர் அல்லது ஆதரவாளர் இல்லாத குழந்தைகள், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவையான குழந்தைகள் என அழைக்கபடுவார்கள்.
இந்த சட்டம் மற்றும் விதிகள் நிறுவனம் மற்றும் நிறுவனம் சாராத அமைப்புகள் இத்தகைய குழந்தைகளுக்கு பாதுகாப்பான சேவையை கட்டாயமாக்கிறது.
கோவிட் தொற்றல் பெற்றோரை இழந்து வேறு ஒருவரது ஆதரவும் இன்றி இருக்கும் குழந்தைகளை 24மணி நேரத்திற்குள்(பயண நேரம் தவிர்த்து) மாவட்ட குழந்தைகள் நல ஆணையத்தில் ஒப்படைக்க வேண்டும்.
கொரோனா காரணமானக நேரடி தொடர்பு இல்லாத காரணத்தால் டிஜிட்டல் தளம் வாயிலாக உரையாடும்படி மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறபிக்கபட்டுள்ளது.
கோவிட் தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பற்றிய தகவலை உதவி எண் (1098) அழைத்து தெரிவிக்கலாம். மேலும்,சம்பந்தபட்ட பகுதியில் உள்ள குழந்தையை 24 மணி நேரத்திற்குள் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும். தேவை ஏற்படும் போது குழந்தையின் நலனை கண்காணிப்பதில் ஆணையத்தில் உள்ளூர் குழந்தை நல பிரிவு ஆதவு அளிக்கும்.
குழந்தையின் உடனடி தேவையை ஆராய்ந்து ஆதரவு அளிப்பவரிடமோ, நிறுவனம் அல்லது நிறுவனம் சாராத அமைப்புகளிடமோ ஒப்படைப்பதை ஆணையம் உறுதி செய்யும்.
குழந்தையின் பாதுகாப்பையும், விருப்பதையும் உறுதி செய்து இயன்றவரை குழந்தையின் குடும்பத்தினர் மற்றும் சமூக சூழலின் பராமறுப்பில் ஒப்படைக்க முயற்சி மேற்கொள்ளபடும்.
உறவினர்களில் பராமறுப்பில் குழந்தை வளர நேர்ந்தால், குழந்தையின் நலனை ஆணையம் அடிக்கடி கண்காணிக்கும்.
பொறுப்புகளை நிறைவேற்றும் வகையில் சம்பந்தபட்ட ஆணையம் கோவிட் வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.
ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுக்க விரும்புவோர் சட்ட பூர்வமான நடவடிக்கைகளுக்கு மத்திய தத்தெட்டுப்பு வள ஆணையத்தை அணுகலாம்.
என புதிய வழிகாட்டு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.