NewsTamilnadu

பேதங்கள் கடந்து மக்கள் பிரதிநிதிகளாக செயலாற்றுவோம்…

பேதங்கள் கடந்து மக்கள் பிரதிநிதிகளாக செயலாற்றுவோம்! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிபிட்டுள்ளார்…

பேதங்கள் கடந்து மக்கள் பிரதிநிதிகளாக செயலாற்றுவோம்...
CM MK Stalin

இன்று (11.05.2021) சென்னை கலைவாணர் அரங்கில் 16 வது சட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. அதில் 2021 தேர்தலில் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற திமுக ஆட்சியை பிடித்தது.

இதை தொடர்ந்து, தமிழ்நாடு சட்ட பேரவையின் தற்காலிக சட்ட பேரவை தலைவர் திரு கு. பிச்சாண்டி அவர்கள் தமிழக முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு 2021க்கிறகான சட்டமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதனை அடுத்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்று கொண்டனர். மேலும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமி பதவி ஏற்று கொண்டனர்.

இவர்கர்களை அடுத்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பதிவி ஏற்று கொண்டனர்..

தமிழகத்தின் 23வது முதலைமைச்சராக பதவி ஏற்று கொண்ட பின் மு.க . ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் அவர் குறிப்பிட்டுருப்பதாவது

பேதங்கள் கடந்து மக்கள் பிரதிநிதிகளாக செயலாற்றுவோம்…

16வது சட்டபேரவையில் உறுப்பினர்களாய் பொறுப்பேற்று கொண்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

கொரோனா தொற்றின் பேரிடலிருந்து மக்களை காப்பதே அரசின் முதன்மையான பணி நிலமையை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வருவதற்க்கு அரசு போர் கால அடிபடையில் செயலாற்றி வருகிறது.

அரசு அதிகாரிகள், காவல் துறையினர், முன்கள பணியாளர்கள் என அனைவரும் தன்னலம் கருதாமல் செயலாற்றி வருகின்றனர்.

சமூக ஆர்வலர்களும், தொழிற்துறையினரும் அரசு மேற்கொள்ளும் முயற்ச்சிகளுக்கு உதவிகரம் அளித்து வருகின்றனர்.

மாண்புமிகு சட்டமன்ற உறுபினர்கள் அவரவர் தொகுதியில் மக்களுக்கு உதவிகளை மேற்கொண்டு அரசின் முயர்ச்சிகளுக்கு துணை நிற்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்.

அரசு உடனடி நடவடிக்கையினை உறுதியான செயல்பாட்டை மேற்கொள்ளும் என்ற உத்தரவாதத்தை அளிக்கிறேன்.

தமிழகத்தை மீட்பதற்க்கு ஆளுங்கட்சி எதிர்கட்சி, தோழமை கட்சிகள் என்ற பேதங்கள் இன்றி மக்களின் பிரதிநிதிகளாக செயலாற்றுவோம்! மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பிட நாம் இணைந்து நிற்போம் என குறிப்பிட்டுள்ளார்..

மேலும் கூறியிருப்பது, கொரோனா தொற்று பரவலை கட்டுபடுத்தும் விதமாக ஊரடங்கு நடைமுறைபடுத்தபட்டிருபதுடன்.

இந்த ஊரடங்கு நேரத்தில் மக்கள் தங்களது பொருளாதார நிலையை சமாளிப்பதற்க்கு குடும்ப அட்டைகளுக்கு ரூ.2000 வழங்கபடுகிறது.

தொற்றால் பாதிக்கபட்டவர்களுக்கு ஆக்ஸிஜன், படுக்கை வசதிகள், மருந்துகள் ஆகியவை கிடைப்பதற்க்கு போர் கால அடிபடையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றது.

நிலைமையை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வருவதற்க்கும் மக்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளை தவிர்ப்பதற்க்கும் எனது தலைமையிலான அரசு முழுமையான அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறது..

சட்டமன்ற பேரவையில்உறுபினர்களாய் பொறுப்பேற்றுள்ளவர்கள் தேர்தல் களத்தில் வெவ்வேறு கூட்டணிகளில் , வெவ்வேறு கட்சி சார்ந்தவர்கள் காலம் கண்டு வெற்றி பெற்றியிருந்தாலும்,

மக்கள் நலன் காப்பதில் ஒரு மித்த கருத்துடன் கட்சி பாகுபாடு இன்றி பணியாற்றிட கடமையும், பொறுப்பும் உள்ளது.

மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் தொகுதிகள் சென்று பேரிடர் காலத்தில் பொதுமக்க்ளுக்கு உதவிகளை மேற்கொண்டு நோய் தொற்றை கட்டுபடுத்தும் அரசின் முயற்சிக்கு துணை நிர்க்குமாறு கேட்டு கொண்டார்.

தங்கள் தொகுதியில் கொரோனாவை கட்டுபடுத்தும் முயர்ச்சியில் எதேனும் தொய்வு தெரிந்தாலோ, படுக்கை வசதி, ஆக்ஸிஜன், மருந்து தேவை ஆகியவற்றில் நெருக்கடி இருந்தாலோ இந்த அர்ஷின் கவனத்திற்கு கொண்டு வருமாறு கோருகிறேன்.

எனது தலைமையிலான அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களை காப்பதில் உறுதியான செயல்பாட்டை மேற்கொள்ளும் என்ற உத்தரவாதத்தை அளிக்கிறேன் என அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !