NewsTamilnadu

பொங்கல் பரிசுதொகுப்பை தொடங்கி வைத்தார் அமைச்சர்…

Last Updated on July 30, 2021 by Dinesh

பொங்கல் பரிசுதொகுப்பை இன்று முதல் தமிழக ரேஷன் கடைகளில் தொடங்கி வைத்தார் தமிழக அமைச்சர்..

பொங்கல் பரிசுதொகுப்பை தொடங்கி வைத்தார் அமைச்சர்…
Pongalgift

பொங்கல் பரிசுதொகுப்பை இன்று முதல் தமிழக ரேஷன் கடைகளில் தொடங்கி வைத்தார் அமைச்சர்.

இந்த பரிசனாது வருடந்தோரம் தமிழக அரசால் வழங்கபட்டு வருகின்றது. கடந்த வருடங்களில் இவை 1000ரூபாய் பணம், அரிசி, துண்டு கரும்பு போன்ற பொருட்களுடன் பொங்கல் பை வழங்கபட்டு வந்தது.

தமிழர் திருநாளாம் தை திருநாளை வருடந்தோறும் தமிழர்களால் வெகு விமர்சியாக கொண்டாடபட்டு வரும் பொங்கல் தினத்துக்கு தமிழக அரசு பொங்கல் தொகுப்பை வழங்கி வருகிறது.

அதன் படி, இந்த வருடம் பொங்கலை சிறப்பிப்பதற்காக தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குவது குறித்து அறிவிப்பு ஒன்றை அறிவித்தார்.

பொங்கல் பரிசுதொகுப்பை தொடங்கி வைத்தார் அமைச்சர்…

அப்போது அவர் கூறுகையில் குடும்ப அரிசி அட்டை தாரர்களுக்கு 2500 ரூபாய் பணம் மற்றும் முழு கரும்பு என அறிவித்து இருந்தார்..

கடந்த வருடம் வரை 1000 ரூபாய் பணம், ஒரு துண்டு கரும்பு என இருந்ததை தற்போது 2500ரூபாய் பணம், ஒரு முழு கரும்பு வழகங்கபடும் என அறிவித்துள்ளார்.

அது மட்டுமின்றி ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 5, கிராம் ஏலக்காய், 20கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு குடும்ப அரிசி அட்டை தாரர்களுக்கு இந்த வருடம் வழங்கபடுவதாக தமிழக முதலமைச்சர் அறிவித்தார்.

பொங்கல் பரிசை மக்கள் பெருவற்கு டோக்கன் முறையில் பொருட்களை தமிழக அரசு வழங்கும் எனவும் தெரிவித்தார்.

அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தங்களுக்கான டோக்கணை பெற்று கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

இது கொரோனா பெரும் தொற்று பரவி வரும் காலம் என்பதனால் பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவதை முற்றிலும் பொது மக்கள் தவிர்க்க வேண்டும் என ஏற்கனவே தமிழக அரசு கேட்டு கொண்டுள்ளது.

இதனை தொடர்ந்து கடந்த மாதமே பொங்கல் பரிசை பெறுவதற்கான டோக்கணை வீடு வீடாக சென்று வழங்கபட்டு வந்தன.

டோக்கனில் குறிப்பிட்டு இருக்கும் தேதியில் குடும்ப அரிசி அட்டை தாரர்கள் .ரேஷன் கடைகளுக்கு சென்று தங்களுடைய  பொங்கல் பரிசை பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கபட்டது.

பொங்கல் பரிசை பெற சம்பந்தபட்ட தேதிகளில் வருவோர் அனைவரும் முக கவசம் அணிதல், தனி மனித இடைவெளி கடைபிடித்தல்.

போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த பொங்கல் பரிசானது தமிழகம் முழுவதிலும் உள்ள 2 கோடியே 10 லட்சம், குடும்ப அரிசி அட்டைதரர்களுக்கு வழங்கபட உள்ளது. இதன் படி,

பொங்கல் பரிசிதொகுப்பை தொடங்கி வைத்துள்ளார் அமைச்சர் காமராஜ். இன்று மன்னார்குடி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் முதல்வர் அறிவித்து இருந்த பொங்கல் பரிசு தொகுப்பை தொடங்கி வைத்தார் உணவு துறை அமைச்சர் காமராஜ்.

இதை தொடர்ந்து டோக்கன்களில் குறிப்பிட்ட தேதிகளில் சென்று அட்டைதாரர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி தங்கள் பொருட்களை அந்தந்த ரேஷன் கடைகளில் பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !