Last Updated on June 30, 2021 by Dinesh
3மணியளவில் நிவர்புயல் எல்லையை கடக்ககூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

இரவு முதல் சென்னையில் கிண்டி, தாம்பரம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், எக்மோர், சென்ட்ரல், மீனம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக சென்னையில் முக்கிய சாலைகளில் நேற்று இரவு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது சாலைகள் எங்கும் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் செல்வதில் கடும் சிரமத்துக்குள்ளானர்கள்.
நிவர்புயல் இன்று இரவு கரையை கடப்பதால் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்வதால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்தால் அவதிக்குள்ளனார்கள்.
நிவர்புயலின் தாக்கம் காரணமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதன்படி இன்று மற்றும் நாளை அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டது.
மேலும் புயலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என முதல்வர் கேட்டு கொண்டுள்ளார்.
3மணியளவில் நிவர்புயல் எல்லையை கடக்ககூடும்…
அதிதீவிர புயலாக மாறிய நிவர்புயல் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தால் மக்கள் நலன் கருதி தமிழக அரசு சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் நிறுத்தி வைக்கபட்டுள்ளது, விமான சேவைகளும் நிறுத்தி வைக்கபட்டுள்ளது..
ரயில் சேவைகளும், விமான சேவைகளும் நிறுத்தி வைக்கபட்டுள்ளதால் மக்கள் சென்னையிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வதற்க்கும். மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்ப முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து செம்பரம்பாக்கம் அணையில் அதிக அளவு நீர்வரத்து வருவதால் 5000 கன அடி உபரி நீர் திறந்து விட போவதாக அரசு அறிவித்தது. ஆதலால் கரையோர குடியிருப்புகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
மேலும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து இரவு 10மணிக்கு மேல் சென்னைக்கு வரவேண்டாம் என காவல்துறை கேட்டு கொண்டுள்ளது.
சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழையால் சாலைகள் வெள்ளகாடானது சென்னையின் முக்கிய சாலைகள் நீரில் மூழ்கியதால் தற்காலிகமாக சாலைகள் மூடபட்டது..
இதனால் பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் சென்னையிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு தரை வழி மார்கமாக செல்லவும் தடை செய்யபட்டுள்ளது.
புயலின் அதிவேக தாக்குதலால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன. இதனால் போக்குவரத்து சிரமத்தை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றனர்.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே முறிந்து விழுந்த மரங்களை சரி செய்து அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நிவர் புயலின் காரணமாக நேற்று முதல் பெய்த மழையால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கபட்டுள்ள நிலையில் தற்போது நிவர்புயல் புதுச்சேரி மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
3மணியளவில் நிவர்புயல் எல்லையை கடக்ககூடும் என்பதால் 16கீ.மீ வேகத்தில் நகர்ந்து வருவதால் கடலூர் மற்றும் பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.