78 குண்டுகள் முழங்க விவேக்கின் உடல் காவல் துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது…

சின்ன கலைவாணர் நடிகர் விவேக்கிற்கு நேற்று முன் தினம் திடீரென நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.
இந்த செய்தியை அறிந்த விவேக்கின் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்ததோடு மட்டுமில்லாமல் அவர் உடல் நலம் தேறி வரவேண்டும்.
என தங்களுடைய பிராத்தனைகளை இணையத்தில் வெளிபடுத்தி வந்தனர். அவருக்கு ரசிகர்கள், திரைத்துறையினர் மட்டுமின்றி தமிழக அரசியியல் தலைவர்கள் பலர் நடிகர் விவேக் உடல் நலம் பெற்று மீண்டும் வர வேண்டும் என கோரிக்கைகளை வைத்தனர்..
ஆனால், இத்தனை பேருடைய வேண்டுதல்கள் பலிக்காமல் நடிகர் விவேக் நம்மை விட்டு பிரிந்தார். இந்த செய்தியை அறிந்த திரைத்துறையினர் மட்டுமல்லாமல் பொதுமக்களும் மிகுந்த பேர் அதிர்ச்சிக்குள்ளானர்கள்,
அவர் நம்மை விட்டு பிரிந்தார் என்பதனை ஏற்று கொள்ள முடியவில்லை என பலர் தங்களது ஆதங்கத்தை வெளிபடுத்தி வருகின்றனர்.
இதை தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் rip vivek என்ற ஹஸ்டாக் உருவாக்கி ரசிகர்கள் தங்கள் அஞ்சலியை நடிகர் விவேக்கிற்கு செலுத்தி வருகின்றனர்.
ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள், நடிகைகள், சின்னதிரை கலைஞர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களது இறுதி அஞ்சலியை நடிகர் விவேக் அவர்களுக்கு செலுத்தி வருகின்றனர்.
78 குண்டுகள் முழங்க விவேக்கின் உடல் தகனம்
மறைந்த நடிகர் விவேக்கின் உடல் பொது மக்கள் மற்றும் திரைத்துறையினர் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது இல்லத்தில் வைக்கபட்டது. அப்போது திரைத்துறையினர் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவரது ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் அஞ்சலி செய்தனர்..
78 குண்டுகள் முழங்க விவேக்கின் உடல் விருகம்பாக்கம் மேட்டு குப்பத்தில் உள்ள மின்மயானத்தில் காவல் துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
நடிகர் விவேக் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். அவர் கிட்டதட்ட தமிழ் சினிமாவில் அனைத்து ஹீரோக்கள் உடன் நடித்து விட்டார். இவர் தான் நடிக்கும்
படங்களில் மக்களை சிந்திக்கவும், சிரிக்கவும் செய்த ஒரு மாபெரும் கலைஞன் அப்படிபட்ட ஒரு கலைஞனை தமிழ் சினிமா மட்டுமில்லை தமிழ் சமூகமும் இழந்து விட்டது என்றே சொல்லலாம்.
இவர் திரைப்படங்களில் மக்களுக்கு தேவையான பல நல்ல கருத்துக்களை தன் காமெடி பாணியில் சொல்வது மட்டுமின்றி, சுற்று சூழல் மற்றும் சமூக பணிகளையும் மேற்கொண்டு வந்தார்..
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமை மிகவும் நேசித்து அவரை முன்னுதாரனமாகவும் ஏற்று கொண்டு க்ரீன் கலாம் என்ற அமைப்பை தொடங்கி
அதன் மூலம் தமிழகம் முழுவதும் அப்துல் கலாம் ஆசை படி ஒரு கோடி மர கன்றுகளை நட விரும்பி அதற்கான பணிகளை மேற்கொண்டார்.
அதில், அவர் சுமார் தமிழகம் முழுவதும் 30 லட்சத்துக்கும் மேலான மர கன்றுகளை நட்டு வைத்துள்ளார்.. அவர் பாதியில் விட்டு சென்ற பணியினை நாம் முழுமை அடைய செய்வது அவருக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை மட்டுமல்ல நாம் இந்த் மண்ணுக்கு செய்ய வேண்டிய முக்கிய கடமை ஆகும்.