Last Updated on August 9, 2022 by Dinesh
கடந்த சில தினங்களுக்கு முன் கொடைக்கானலில் நீர் வீழ்ச்சி பகுதியில் செல்ஃபீ எடுக்க முயன்ற போது ஆற்றில் தவறி விழுந்த இளைஞசரின் வீடியோ பெரும் பரபரப்பை கிளப்பியது..

கொடைகானல் பகுதியில் உள்ள பெரும்பாறை அருகே புல்லாவெளி அருவியில் தன் நண்பருடன் புகைப்படம் எடுக்க சென்ற 28 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் ஆற்றில் தவறி விழுந்தார்..
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக ஒகேனக்கல்,
கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அருவிகளில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து காணபடுவதால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது..
இதன் காரணமாக குற்றலாம் போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் காவல் துறையினர் பாதுகாப்பு அதிகரிக்கபட்டு அருவிகளில் குளிக்க தடை விதிக்கபட்டுள்ளது..
இதை தொடர்ந்து, கடந்த வாரம் 3 ஆம் தேதி தன் நண்பருடன் புல்லாவெளி அருவிக்கு சென்ற வாலிபர் ஒருவர் அங்குள்ள பாறை ஒன்றின் மீது ஏறி புகைபடங்கள் எடுக்க முயன்றுள்ளார்..
அப்போது, புகைபடத்திற்க்கு போஸ் கொடுத்து கொண்டு இருக்கும் பொழுது எதிர்பாராவிதமாக தனது கால் பாறையில் வழுக்கியாதால்,
அவர் கண் இமைக்கும் நேரத்தில் சீறி பாய்ந்து ஓடி கொண்டிருக்கும் ஆற்று நீரில் அடித்து செல்லபட்டார்..
இதனை வீடியோ பதிவு செய்து கொண்டிருந்த அவரின் நண்பர் பதறியடித்து கொண்டு ஓடும் அந்த வீடியோ காட்சியானது கடந்த சில தினங்களுக்கு முன் பெரும் வைரலாக பரவி வந்தது..
கடந்த 3 ஆம் தேதி கொடைக்கானல் பகுதி பெரும்பாறை அருகே புல்லாவெளி அருவியில் அடித்து செல்லபட்ட,
இளைஞசரை காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆகியோர் தீவிரமாக தேடி வந்தனர்..
தொடர்ந்து 6 நாட்களாக ஆற்றில் அடித்து சென்ற வாலிபரை தேடி வந்த காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை இன்று அவரது உடலை சடலமாக கண்டெடுத்துள்ளனர்..
புல்லாவெளி அருவி ஆற்றில் அடித்து செல்லபட்ட அஜய் பாண்டியன் 6 நாட்களுக்கு பிறகு பாறைகளுக்கு நடுவில் சடலமாக மீட்கபட்டுள்ளார்.