Last Updated on May 3, 2023 by Dinesh
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும், இயக்குனருமான மனோபாலா இன்று உடல் நல குறைவு காரணமாக காலமானார்..
![Breaking : நடிகரும் இயக்குனருமான மனோபாலா காலமானார்](http://i0.wp.com/www.natshathiram.com/wp-content/uploads/2023/05/manobala.jpg?resize=780%2C439&ssl=1)
தமிழ் படங்களில் காமெடி நடிகர், குணசித்திர நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என தனி ஆளாக கலக்கி வந்தவர் மனோபாலா சமீபத்தில் இவருக்கு கல்லீரல் பிரச்சனை சம்பந்தமாக தனது வீட்டிலே கடந்த 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ( 03-05-23) காலமானார்..
69 வயதான மனோபாலாவுக்கு கடந்த மாதம் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவருக்கு இதய இரத்த குழாய் ( ஆஞ்சியோ ) சிகிச்சை செய்யபட்ட பின் நலமுடன் இருப்பதாக மனோபாலாவின் புகைபடங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி ஆறுதலை கொடுத்தது..
![Breaking : நடிகரும் இயக்குனருமான மனோபாலா காலமானார்](http://i0.wp.com/www.natshathiram.com/wp-content/uploads/2023/05/manobala-death.jpg?resize=700%2C394&ssl=1)
தற்போது கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைக்கு சிகிச்சை பெற்று வந்த மனோபாலா சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருப்பது அவரது ரசிகர்கள் மற்றும் தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது..
மனோபாலாபின் இறப்பிருக்கு ரசிகர்கள் மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்..
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுபள்ளியில் 1953-ஆம் ஆண்டில் டிசம்பர் 8-ஆம் தேதி பிறந்த மனோபாலா. சினிமா மீது கொண்ட ஆர்வம் காரணமாக 1970-களில் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை தேட தொடங்கியவர்..
பின்னர், இயக்குனர் பாரதி ராஜா இயக்கத்தில் 1979-இல் வெளிவந்த புதிய வார்ப்புகள் படத்தில் உதவி இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார் மனோபாலா..
இதை தொடர்ந்து தமிழில் 20-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி இருக்கிறார். இயக்குனராக மட்டுமில்லாமல் 1980-களில் இருந்தே தன்னை ஒரு நடிகராகவும் நிலை நிறுத்தி கொண்டு 1979 முதல் 2023 வரை பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் நீங்கா இடம் பிடித்துள்ளார் மனோபாலா.