Last Updated on May 21, 2022 by Dinesh
குரூப் 2, 2ஏ தேர்வில் சுமார் 1.83 லட்சம் பேர் தேர்வு எழுத வரவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது..

தமிழகத்தின் பல்வேறு துறைகளில் உள்ள 5529 காலிபனியிடங்களை நிரப்ப தமிழ்நாடு முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி ககுரூப் 2, 2 ஏ முதல் நிலை தேர்வுகள் நடைபெற்றன..
இன்று காலை தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகள் காலை 9.00 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.30 மணி வரையில் தேர்வுகள் நடைபெற்றன..
இந்த தேர்வில் முககவசம் அணிவது கட்டாயமில்லை, அடையாள அட்டை, நுழைவு சீட்டு, எலெக்ட்ரானிக் சாதனங்களுக்கு அனுமதி இல்லை, கை குட்டை தண்ணீர் பாட்டீல் போன்றவை எடுத்து செல்ல அனுமதி, கருப்பு நிற மைய்யிலான பேனாவினை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கட்டுபாடுகள் விதிக்கபட்டன..
சுமார் 5529 காலிபணியிடங்களுக்காக நடைபெற்ற இத்தேர்வில் மொத்தமாக 12 லட்சம் பேர் போட்டி போட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஆண்களை விட கூடுதலாக 2 லட்சம் பெண்கள் இன்று தேர்வு எழுதுகின்றனர்..
4,012 தேர்வு மையங்களில் 11.78 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத இணையத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்திருந்த நிலையில் வெறும் 9.94 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுத பங்கேற்றுள்ளனர்..
இன்று ( 21/05/2022 ) நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் சுமார் 1.83 லட்சம் பேர் தேர்வு எழுத வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.