Last Updated on March 24, 2022 by Dinesh
கண் இமைக்கும் நொடியில் பிரிந்த உயிர் மனதை உருக்கும் இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை நடந்துள்ளது… அதன் முழு விவரம் பின்வருமாறு..

சென்னை ஈ.சி.ஆர் (ECR) கானத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் (AMET University) தனியார் கல்லூரி வளாகத்தில் தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இக்கல்லூரி அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு நபர் தன்னுடைய காரை வழக்கம் போல் கல்லூரியின் பார்க்கிங் மைதானத்தில் தன் வாகனத்தை நிறுத்தியுள்ளார்..
அந்த கல்லூரியின் வளாகத்தில் சுற்றி திரியும் நாய் ஒன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததின் காரணமாக நிழலுக்கு ஒரு ஓரமாய் ஒதுங்கி படுத்து கொண்டிருந்துள்ளது. அப்போது தன்னுடைய வாகனத்தை எடுப்பதற்காக வந்த காரின் உரிமையாளர் தன் காரை வேகமாக திருப்பிஓட்டி சென்றத்தில் அங்கு நிழலுக்காக ஒதுங்கிபடுத்திருந்த நாயின் மீது கார் ஏரியதால் அலரி துடித்து கொண்டு அங்கு இருந்த மற்ற வாகனங்களுக்கு அடியில் சென்று கத்தி கதறியுள்ளது..

நாயின் அலறல் சத்தம் கேட்டு கல்லூரி வளாகத்தில் இருந்தவர்கள் சம்பவ இடத்திற்க்கு ஓடி வந்து பார்க்கையில் எல்லோர் கண் முன்னே சிறிது நேரத்தில் துடி துடித்து இறந்து உள்ளது.
காரின் டயர் ஏரி இறங்கியதில் நாயின் உடலில் வெளி காயம் ஏதும் இன்றி உடலின் உட்புறத்தில் பலத்த காயம் ஏஏற்பட்டிருக்கலாம் என கருதபடுகிறது.. நாயின் மீது காரை ஏற்றிய நபர் நிற்காமல் அங்கிருந்து வேகமாக காரை ஓட்டி சென்றுள்ளார்..
பின்னர், இது குறித்து காவல் துறையிடமோ அல்லது விலங்குகள் நல அமைப்பிடமோ தெரிவிக்காமல் வெயிலின் தாக்கம் காரணமாக நாய் இறந்துவிட்டதாக கூறி அங்கேயே நாயின் உடலை புதைத்துள்ளனர்..
அந்த கல்லூரி வளாகத்தில் சுற்றி திரிந்த நாய் தங்கள் கண் முன்னே கண் இமைக்கும் நொடியில் அலரி துடி துடித்து இறந்தது அங்கு கூடி இருந்தவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.