பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய விவகாரம்? அதிரடி காட்டிய காவல்துறை

பள்ளி சீருடையில் இருக்கும் மாணவிக்கு தாலி கட்டும் வீடியோ கடந்த இரண்டு நாட்களாக வைரலாக பரவி வந்த நிலையில் காவல்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது..

பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய விவகாரம்? அதிரடி காட்டிய காவல்துறை
chidambaram

சிதம்பரத்தில், காந்தி சிலை அருகே உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் 12-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் அமர்ந்து இருக்கையில் பாலிடெக்னிக் படிக்கும்

மாணவர் ஒருவர் சிரித்தபடி மாணவிக்கு தாலி கட்டும் வீடியோ ஒன்று நேற்று சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..

பள்ளி சீருடையுடன் இருக்கும் அந்த மாணவி தாலி கட்டும் பொழுது சிரித்த முகத்துடன் அதனை ஏற்று கொள்கிறார்.

இதனை வீடியோ பதிவு செய்யும் நபரும் அவர்களுக்கு பூ தூவி வாழ்த்து தெரிவிப்பது போல இருக்கும்

அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் கண்டனங்களையும், எதிர்ப்பையும் பெற்று வந்தது..

இதனை தொடர்ந்து, நேற்றைய தினமே சிதம்பரம் காவல் துறையினர் வீடியோவில் சம்பந்தப்பட்ட இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடித்தினர் அப்போதுகாவல் நிலையத்தில் சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் நல அலுவலரும் போலீசார் உடன் இருந்தனர்..

மேலும், பள்ளி மாணவிக்கு மாணவர் தாலி கட்டும் பொழுது அவர்களை தடுத்து இவ்வாறு செய்வது சட்டப்படி குற்றம் என சம்பந்தபட்ட மாணவர்களுக்கு அறிவுரை வழங்காமல் அவர்களை ஊக்குவிக்கும்

வகையில் சம்பவத்தை வீடியோ பதிவு செய்து அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட அதே பகுதியை சேர்ந்த பாலாஜி கணேஷ் வயது (42) என்பவரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்..

பாலாஜி கணேசனை போலீசார் கைது செய்ததும் அவர் தனக்கு உடல் நிலை சரியில்லை என கூறியதால் அவரை சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் அனுமதித்து உடல் பரிசோதனை நடைபெற்று வருகிறது..

இதனையடுத்து சம்மந்தபட்ட மாணவி மற்றும் மாணவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் குற்றம் உறுதி செய்யபட்டதையடுத்து.

பள்ளி மாணவி கடலூர் பெண்கள் காப்பகத்திற்க்கு அனுப்பி வைக்கபட்டார். மாணவிக்கு தாலி கட்டிய பாலிடெக்னிக் மாணவர் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டார்.

Exit mobile version