பெண் வேடத்தில் காதலியை பார்க்க சென்ற இடத்தில் மர்ம நபருக்கு திடீரென நடந்த விபரீதம் என்ன தெரியுமா?

வேலூரில் திருமணமான ஒருவர் தன் காதலியை பார்க்க இரவில் பெண் வேடத்தில் சென்று அங்குள்ள பொதுமக்களால் தர்ம அடி வாங்கியுள்ளார்.
வேலூரில் உள்ள சைதாபேட்டை மெயின் ரோடு சாலையில் நேற்று இரவு 10.00 மணிக்கு மர்ம நபர் ஒருவர் முகத்தை மூடி கொண்டு பெண் போல வேடமிட்டு நடந்து சென்றுள்ளார்.
ஆனால், அவர் நடந்து சென்ற விதம் ஆண் நடப்பதை போல இருக்கவே அங்கு இருந்த பொது மக்களுக்கு இந்த மர்ம நபரின் மீது சந்தேகம் எழுந்துள்ளது.
பெண் வேடத்தில் காதலியை பார்க்க சென்ற நபர்…
இந்த நேரத்தில் பெண் வேடமிட்டு வந்து இருப்பது ஒரு வேலை திருடனாக இருக்குமோ என கருதிய அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் அவனை பிடித்து விசாரிக்க முடிவு செய்தனர்.
இதை தொடர்ந்து, உடனடியாக சுதாரித்து கொண்ட அப்பகுதி மக்கள் அந்த மர்ம நபரை பிடித்து விசாரித்த போது தான் தெரிய வந்தது பர்தா அணிந்து கொண்டு பெண் வேடத்தில் வந்து இருப்பது ஒரு ஆண் என்று..
மாருவேடத்தில் வந்து இருப்பது திருடன் தான் என எண்ணி அப்பகுதியை சேர்ந்த மக்கள் அங்கு இருந்த மின் கம்பம் ஒன்றில் அவனை கட்டி வைத்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.
பின்னர், பிடிபட்டவனை வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் அந்த மர்ம நபரை ஒப்படைத்துள்ளனர்.
இதை தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அர்த்த ராத்திரியில் பெண் போல் வேடமிட்டு வந்தது வேலூர் ஒல்டு டவுனை சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது.
மேலும், போலீஸார் நடித்திய விசாரணையில் பிடிபடவர் 28 வயதுடையவர் என்றும் அந்த நபர் டைல்ஸ் ஓட்டும் கூலி தொழிலாளி என்றும் தெரிய வந்துள்ளது.
இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மூன்று பெண் குழந்தைகள் இருப்பது காவல் துறை விசாரணையில் தெரிவித்துள்ளார்..
மேலும், இதை தொடர்ந்து நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த 19 வயது உடைய பெண்ணை ரகசியமாக சந்தித்து பேசுவதற்காக இந்த நபர் தினமும் இரவில் பெண் வேடத்தில் பர்தா அணிந்து கொண்டு சென்றுள்ளார்.
தாங்கள் இரண்டு வருடங்களாக காதலித்து வருவதாகவும் தான் காதலிக்கும் பெண்ணை கவருவதற்க்காகவும்,
இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காகவும் இப்படி பெண் வேடமிட்டு இரவில் சென்றதாகவும் காவல் துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்
அப்படி வழக்கம் போல் நேற்று இரவு அந்த பெண்ணை பார்ப்பதற்காக பர்தா அணிந்து கொண்டு செல்லும்
Marudhaani : அண்ணாத்த படத்தின் பாடல்…
பொழுது இவரின் நடவடிக்கையால் அங்கிருந்த அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் எழுந்ததால் வசமாக சிக்கி கொண்டு தர்ம அடி வாங்கி பிடிபட்டு உள்ளார்.
இதை தொடர்ந்து காவல் துறையினர் அந்த நபரை இது போன்ற செயலில் இனி ஈடுபட கூடாது என்று எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்து உள்ளனர்..
மாநாடு தீபாவளிக்கு ரிலீஸ் இல்லை காரணம்?
திருமணம் ஆன ஒருவர் தான் காதலிக்கும் பெண்ணை பார்ப்பதற்கு இரவில் பெண் வேடமிட்டு வந்தது. அப்பகுதியில் இச்சம்வம் சிறிது நேரம் பரபரப்பை கெளப்பியது.