சிலிண்டருக்கு மாதம் 200மானியம் நிர்மலா சீதாராமன்

சிலிண்டருக்கு மாதம் 200மானியம் வழங்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்..

சிலிண்டருக்கு மாதம் 200மானியம் நிதி அமைச்சர்
Finance minister nirmala sitharaman

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய்யின் மதிப்பை பொறுத்து பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டரின் ஆகியவற்றின் விலைகளில் மாற்றங்களை அமைக்கபடுகிறது..

அந்த வகையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை நிலவரம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

கடந்த சில மாதங்களாக சமையல் எரிவாயுவின் விலை ரூ.900-த்தை கடந்த நிலையே காணப்பட்டு வந்தது..

இதனால், ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் மிகவும் சிக்கலில் தவித்து வந்தனர். இதன் காரணமாக சமையல் எரிவாயுவின் விலை குறையும் என நாளுக்கு நாள் எதிர்பார்த்து இருந்த மக்களுக்கு திடீரென கேஸ் சிலிண்டரின் விலை மீண்டும் உயர்த்தபட்டது..

கடந்த மாதங்களில் ரூ.1000-த்தை நெருங்கி இருந்த சமையல் எரிவாயுவின் விலை கடந்த மாதம் ரூ.1000-த்தை கடந்து

வரலாற்றிலே முதன் முறையாக சமையல் எரிவாயு ரூ.1015.5 என்ற விலைக்கு விற்பனை செய்யபட்டது..

சமையல் எரிவாயுவின் இந்த கிடு கிடு விலை உயர்வால் கடும் நெருக்கடிக்கு உள்ளான நடுத்தர, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றது..

இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்..

இதனுடன் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்..

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு

அந்த அறிவிப்பில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருப்பது : இந்த ஆண்டு பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் 9 கோடி பயனாளிகளுக்கு ஒரு காஸ் சிலிண்டருக்கு (12 சிலிண்டகள் வரை ) மாதம் 200 மானியமாக வழங்குவோம்..

இது நம் தாய் மற்றும் சகோதரிகளுக்கு உதவும் மேலும் இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 6100 கோடி வருவாய் ஈட்டபடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version