பிரிட்டன் ராணி 2ம் எலிசபெத் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். இதனை நேற்று பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரபூர்வமாக அறிவித்தது..

ஸ்கொட்லாந்தில் அமைந்துள்ள பால்மோரல் ராயல் எஸ்டேட்டில் தங்கி இருந்த பிரிட்டனின் மகாராணி எலிசபெத்திற்க்கு நேற்று திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது..
இதனையடுத்து பக்கிங்ஹாம் அரணமனையின் மருத்துவர்களால் ராணி எலிசபெத்திற்கு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு தீவிர கண்காணிப்பில் வைத்து கண்காணித்து வருவதாக அரண்மனை தரப்பில் தகவல் தெரிவிக்கபட்டிருந்தது..
இந்த செய்தியை அறிந்த ராணி எலிசபெத்தின் மகன் சார்லஸ் உட்பட குடும்பத்தினர்கள் அனைவரும் பக்கிங்ஹாம் அரண்மனை நோக்கி விரைந்தனர்..
மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த மகாராணி எலிசபெத் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிர் பிரிந்தது. 96 வயதான எலிசபெத் பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற சிறப்பை பெற்றவர். கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் பிரிட்டன் ராணியாக இருந்து வந்தவர் இரண்டாம் எலிசபெத்..
பிரிட்டன் ராணி எலிசபெத்தின் மறைவிற்க்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்தனர்..
இதை தொடர்ந்து இந்திய அரசு ராணி எலிசபெத் மறைவிற்கு மரியாதை செய்யும் விதமாக வரும் செப்டெம்பர் மாதம் 11 ஆம் தேதி ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிப்பு மற்றும் மூவர்ணகொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என அறிவித்துள்ளது..
மேலும், அன்றைய தினத்தில் அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது எனவும் தெரிவித்துள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள அந்நாட்டு துணை தூதுரகத்தில் இரங்கல் புத்தகம் ஒன்று வைக்கபட்டுள்ளது..
இன்றில் இருந்து மூன்று நாட்கள் பொதுமக்கள் சென்று பிரிட்டன் ராணி எலிசபெத் மறைவிற்க்கு இரங்கல் தெரிவிக்கலாம் என தூதுரகம் அறிவித்துள்ளது.