Last Updated on September 18, 2024 by Dinesh
பாடகர் கேகே செவ்வாய் இரவு 10.30 மணி அளவில் மாரடைப்பால் இறந்துவிட்டார் என்ற செய்தியால் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

பிரபல கேகே என்று அழைக்கப்டும் கிருஷ்ண குமார் குன்னத் நேற்று இரவு கொல்கத்தாவில் நஸ்ருல் மஞ்சா என்ற ஆடிடோரியத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்..
இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற கேகே தன் ரசிகர்களின் ஆரவாரத்தில் பாடல்களை பாடி முடித்துவிட்டு. இரவு தான் தங்கி இருக்கும் ஓட்டலுக்கு சென்றுள்ளார் அங்கு அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளதாக கூறப்படுகிறது..
இதனையடுத்து கேகே உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கேகே ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்..
53 வயது நிரம்பிய கேகே என்ற கிருஷ்ணகுமார் குன்னத் மறைவிற்க்கு தமிழ் மற்றும் இந்தியா சினிமா திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இவருக்கு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்..
கிருஷ்ணகுமார் குன்னத் தமிழில் சூர்யா நடித்த காக்க காக்க திரைபடத்தில் இடம் பெற்ற ‘உயிரின் உயிரே’ 7G rainbow colony படத்தில் இடம்பெற்ற நினைத்து நினைத்து பார்த்தேன் உள்ளிட்ட வெற்றி பாடல்களை பாடியுள்ளார்.