சென்னையில் இருந்து கும்மிடிபூண்டிக்கு செல்லும் மின்சார ரயிலில் பயணிடம் செல்போன் பறிக்க முயன்றவர் படுகாயம் அடைந்துள்ளார்..

சென்னையில் இருந்து கும்மிடிபூண்டி நோக்கி செல்லும் மின்சார ரயில் கொருக்குபேட்டை அருகே உள்ள பாலத்தை கடக்கும் ரயில் மெதுவாக செல்லும் இதனை மர்ம நபர்கள் பயன்படுத்தி கொண்டு ரயில் பயணிகளிடம் செல்போன் பறிப்பில் ஈடுபடுவதாக தொடர்ந்து பல புகார்கள் எழுந்து வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இன்று சென்னையிலிருந்து கும்மிடிபூண்டி சென்ற மின்சார ரயில் கொருக்குபேட்டை பாலம் அருகே மெதுவாக சென்று கொண்டிருந்த போது அதில் பயணம் செய்த பயணி,
ஒருவர் ஜன்னல் ஒர இருக்கையில் அமர்ந்து கொண்டு கையில் மொபைலை வைத்து பார்த்து கொண்டிருந்த வேலையில் செல்போனை பறிக்க மர்ம நபர் ஒருவர் ரயிலின் மீது தாவி குதித்து ஜன்னல் மீது ஏறி மொபைலை பறிக்க முயன்றுள்ளார்.
அப்போது, எதிர்பாராவிதமாக தவறி கீழே விழுந்ததில் கால்கள் ரயிலின் சக்கரத்தில் மாட்டியத்தில் அவரது இடது கால் துண்டானது.
வலியால் அலரி துடித்து கொண்டிருந்தவரை அருகில் இருந்த அக்கம் பக்கத்தினர் ரயில்வே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கவே விரைந்து வந்த காவல் துறையினர் பாதிக்கபட்டவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்..
இந்த விபத்து குறித்து பாதிக்கபட்ட நபரிடம் விசாரணை நடத்திய ரயில்வே போலீசார் விசாரணையில்
பாதிக்கபட்டவர் வண்ணாரபேட்டை பென்சில் பேட்டரி சீனிவாசபுரத்தை சேர்ந்த நவீன் என்கிற அட்டை நவீன் வயது (24) என்பது தெரிய வந்துள்ளது..
இவர் மீது ஏற்கனவே காவல்துறையில் பல திருட்டு புகார்கள் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது..
ஆபத்தை உணராமல் செல்போன் பறிக்க முயன்று ஒரு காலை இழந்தது சம்பவம் ரயில் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.