Last Updated on December 9, 2022 by Dinesh
வங்ககடலில் உருவான மாண்டஸ் புயல் சென்னைக்கு மிக அருகில் மையம் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானதை தொடர்ந்து புயலாக வலுவடைந்த நிலையில் இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடபட்டுள்ளது..
சென்னை : இன்று நள்ளிரவு முதல் அதிகாலைக்குள் சென்னைக்கு அருகே உள்ள மாமல்லபுரத்தில் மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ளது.
தற்போது இந்த மாண்டஸ் புயலானது 14 கி.மீ . வேகத்தில் நகர்ந்து கொண்டு வந்திருப்பதால் மாமல்லபுரத்திற்க்கு சுமார் 70 கி.மீ . தூரத்திலும் சென்னைக்கு 110 கி.மீ .தொலைவிலும் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது..
புயலின் வேகம் அதிகரித்துள்ள இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் சுமார் 3 மணி நேரமாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது..
இதனிடையே தமிழகத்தில் இன்று மாண்டஸ் புயல் காரணமாக 28 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்டிருந்தது. இந்த மாண்டஸ் புயலால் ஏற்பட்ட கன மழை காரணமாக தமிழகத்தில் நாளை 15 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்டுள்ளது.
மாண்டஸ் புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை (10.12.2022) 15 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..
செங்கல்பட்டு, நீலகிரி, சேலம், வேலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தர்மபுரி, கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருபத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கபட்டுள்ளது.