Last Updated on August 19, 2022 by Dinesh
எழுத்தாளர், பட்டி மன்ற நடுவர், சிறந்த பேச்சாளர், தமிழ் கடல் என அழைக்கப்பட்டு வந்த திரு. நெல்லை கண்ணன் இன்று காலமானார்..

1945 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் தந்தை ந.சு. சுப்பையா பிள்ளை, தாய் முத்து லக்குமிக்கும் மகனாக பிறந்தவர் தான் திரு. நெல்லை கண்ணன்..
விவசாய குடும்பத்தை பின்புலமாக கொண்ட நெல்லை கண்ணன் தமிழ் மீது தீராத பற்றும், ஆர்வமும் கொண்டிருந்தமையாமல் தமிழ் இலக்கிய நூல்களை கற்ற தேர்ந்தவர்..
நெல்லை கண்ணன் கலந்து கொள்ளும் மேடைகள், பட்டி மன்றங்களில் காமராஜ், கக்கன் போன்ற தலைவர்களை பற்றிய சுவார்ஷ்ய தகவல்களை தனக்கே உண்டான நகைச்சுவை உணர்வுடன் எடுத்துரைப்பவர்..
இன்றைய தலைமுறையினரிடையே காமராஜ், கக்கன் உள்ளிட்ட தலைவர்களை கொண்டு சேர்க்கும் வகையில் அவர்களின் செயல்பாடுகளையும், அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை சூழலையும் அழகிய தமிழ் சொற்களால் பல மேடைகளில் பேசி வந்தவர்..
இவர், தற்போது கடந்த சில மாதங்களாக உடல் நிலை பாதிக்கபட்டிருந்த நிலையில் திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார்..
இதை தொடர்ந்து நெல்லை கண்ணனின் உடலுக்கு நாளை மதியம் 1.00 மணிக்கு இறுதி சடங்கு நடைபெறும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது..
நெல்லை கண்ணனின் மறைவிற்க்கு தமிழ் முதலமைச்சர் ஸ்டாலின், விசிக. தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்..
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
தமிழ் கடல் நெல்லை கண்ணன் மறைவெய்திய செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்: அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாற்க்கும், தமிழ் உலகினருக்கும் ஆழ்ந்த இரங்கல் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..
விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல்
தமிழ் கடல் அய்யா நெல்லை கண்ணன் அவர்களுடைய மறைவு துயரமளிக்கிறது. அவரது மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம்..
மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் எமது செம்மார்ந்த வீரவணக்கத்தையும் செலுத்துகிறோம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.