Last Updated on May 9, 2023 by Dinesh
பா ரஞ்சித் உதவி இயக்குனர் விடுதலை சிகப்பி மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது காவல் துறை…

கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த நிகழ்வில் ‘மலக்குழி மரணம்’ எனும் தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித்தின் உதவி இயக்குனராக பணி புரியும் விடுதலை சிகப்பி கலந்து கொண்டு மேடையில் பேசினார்..
அப்போது, உதவி இயக்குனர் விடுதலை சிகப்பி என்கிற விக்னேஷ்வரன் இந்து கடவுள்களான ராமர், சீதை உள்ளிட்ட இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி விட்டதாக கடந்த நான்கு நாட்களாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாக்கபட்டிருந்தது..
இந்த நிலையில் தமிழ் நாடு பாஜக மற்றும் இந்து அமைப்புகளை சாரந்த சிலர் எழுப்பிய புகாரின் அடிப்படையில் உதவி இயக்குனர் விடுதலை சிகப்பி மீது கலகத்தை தூண்டுதல், குறிப்பிட்ட ஒரு மதத்தை புண்படுத்தல் உள்ளிட்ட 5 பிரிவிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது..
காவல் துறையின் இந்த நடவடிக்கை படைப்பு சுதந்திரத்திற்க்கு மிகவும் எதிரானது என திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்..
பா ரஞ்சித் கண்டன அறிக்கை
கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த நிகழ்வில் மலக்குழி மரணம் எனும் தலைப்பில் கவிஞர் விடுதலை சிகப்பி எனும் விக்னேஷ்வரன் கவிதை ஒன்றை வாசித்து இருந்தார்.
அக்கவிதை நாடு முழுக்க தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் மலக்குழி மரணங்கள் குறித்த அக்கறையை வெளிபடுத்துவதாகும். அத்தகைய மரணங்களை கண்டும் காணாமல் போகும் சமூக நிலையை சுட்டிக்காட்ட வேண்டும்
என்பதற்காக சாதாரண மனிதர்களுக்கு பதில் கடவுள் ஸ்தானத்தில் இருப்பவர்கள் அத்தகைய வேலையை செய்து மரணத்தை தழுவினாலாவது கவனம் பெருமோ என்கிற பொருளில் அந்த கவிதை இருந்தது..
ஒரு எழுத்தாளரின் படைப்பு சுதந்திரம் அது, மற்றபடி எந்த நம்பிக்கையையும் திட்டமிட்டு இழிவாக எழுதுவதோ, பேசுவதோ, கவிதையின் நோக்கமல்ல என இயக்குனர் பா ரஞ்சித் விளக்கம் அளித்துள்ளார்..
கடந்த மூன்று நாட்களாக விடுதலை சிகப்பியின் கிராமத்தில் இருக்கும் பெற்றோர்கள் காவல் துறையினரால் விசாரிக்கபட்டு வருகிறார்கள்.
ஒரு படைப்பின் மையப்பொருளை விளங்கிக்கொள்ளாமல் அல்லது விளங்கி கொள்ள விரும்பாமல் படைப்பு சுதந்திரத்திற்கு எதிராக தொடுத்த வழக்கை பதிவு செய்திருக்கும் காவல் துறை மற்றும் தமிழக அரசின் செயல் கண்டிக்கதக்கது..
மேலும் பா ரஞ்சித் கூறுகையில், இக்கவிதையின் பாடுபொருள் மலக்குழி மரணம் பற்றியது, உண்மையில் அவைதான் பேசுபொருளாகி இருக்க வேண்டும்.
அதை திசை மாற்றி இதை மத பிரச்சனையாக்கி உருமாற்றும் நடவடிக்கையை நீலம் பண்பாட்டு மையம் கண்டிக்கிறது எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.