தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் இரண்டாவது பெரிய விமான நிலையம் அமைக்கவிருப்பதாக தமிழக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது..

தற்போது சென்னையில் மீனம்பாக்கத்தில் அமைந்திருக்க கூடிய விமான நிலையம் உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களை இயக்க கூடிய வகையில் பிரமாண்டமாக கட்டமைக்கபட்டு செயல்பாட்டில் உள்ளது..
இதை தவிர, தற்போது புதியதாக அமைக்கவுள்ள விமான நிலையம் சுமார் 10 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..
ஏற்கனவே, நடைமுறையில் இருக்கும் விமான நிலையமானது ஆண்டுக்கு 2.2 கோடி பயணிகளை கையாண்டு வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. மேலும் இது போக தற்போது நடைபெற்று விமான நிலைய விரிவாக்க பணிகள் முடிவடைந்த
பின்னர் அடுத்த 7 ஆண்டுகளில் சென்னை விமான நிலையம் ஆண்டிற்க்கு சுமார் 3.5 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக அமையும் என சொல்லப்படுகிறது..
இதை தொடர்ந்து சென்னையில் மீண்டும் புதிய விமான நிலையம் அமைக்க டிட்கோ நிறுவனம் மூலம் தமிழக அரசு விமான நிலையம் அமைக்க இடங்களை தேர்வு செய்து வந்தது..
அவ்வாறு, தேர்வு செய்யபட்ட இடங்கள் மொத்தம் நான்கு அந்த நான்கு இடங்களை ஆய்வு செய்த இந்தியா விமான நிலைய ஆணையம் அவற்றில் இரண்டு இடங்களை விமான நிலையம் அமைக்க சாத்தியமான இடங்கள் என பரிந்துரை செய்துள்ளது..
அப்படி தேர்வு செய்யபட்ட இரண்டு இடங்களில் ஒரு இடமான பரந்தூரில் சென்னையின் புதிய விமான நிலையம் அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது.
தற்போது சென்னையில் செயல்பட்டு வரும் விமான நிலையத்துடன் புதியதாக கட்டபடும் விமான நிலையம் சேர்ந்து செயல்படும் வகையில் அமைக்கபட உள்ளது..
சென்னையின் புதிய விமான நிலையம் 20,000 கோடி திட்ட மதிபீட்டில் அமைக்கப்படும் எனவும் இதனால் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்கும்
குறிக்கோளை எட்டும் பயணத்தில் புதிய விமான நிலையம் ஒரு மைல்கல் என தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்..
இதையடுத்து பரந்தூரில் வசிக்கும் மக்கள் தங்களது விளை நிலங்களையோ, வீட்டு நிலங்களையோ பாதிக்காத வண்ணம்,
விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருவது குறிபிடத்தக்கது.