Breaking : பாடகர் kk மறைவிற்க்கு இரங்கல் தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி

Breaking : பாடகர் kk மறைவிற்கு இந்திய அளவில் திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வரும் வேலையில் பிரதமர் நரேந்திர மோடி கே‌கே-வின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்..

Breaking : பாடகர் kk மறைவிற்க்கு இரங்கல் தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி
pm modi & singer kk

இந்திய சினிமாவில் முன்னணி பாடகர்களில் ஒருவரான கே‌கே என்கின்ற கிருஷ்ணகுமார் குன்னத் செவ்வாய் (31-05-2022) இரவு 10.30 சுமார் மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டு மறைந்தார் என்ற செய்தி நள்ளிரவு வெளியாகியது..

இந்த செய்தியறிந்த இந்திய சினிமா பிரபலங்கள் மற்றும் கே‌கே-வின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்கள் இரங்கல்களை சமூக வலைத்தளங்களின் மூலம் கே‌கேவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..

பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்தின் இந்த திடீர் மறைவால் அவரது ரசிகர்கள், திரை பிரபலங்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திரா மோடியும் கே‌கேவின் இறப்பிற்க்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்..

இது குறித்து பிரதமர் நரேந்திரா மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பது பிரபல பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்தின் அகால மறைவு வருத்தமளிக்கிறது. அனைத்து வயதினரையும் கவர்ந்த அவரது பாடல்கள் பலவிதமான உணர்ச்சிகளை பிரதிபலித்தன அவரது பாடல்கள் மூலம் நாம் எப்போதும் அவரை நினைவில் கொள்வோம் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் ஓம் சாந்தி என தனது தெரிவித்து உள்ளார்.

Exit mobile version