Last Updated on August 13, 2022 by Dinesh
பிரபல தனியார் தொலைகாட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் ரச்சிதா மகாலக்க்ஷமி..

சரவணன் மீனாட்சி பாகம் 1 மற்றும் 2 ஆகிய தொடரில் கதாநாயகியாக நடித்து அசத்தி வந்தார்.. சரவணன் மீனாட்சி சீரியல் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பல தொடர்களில் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர் தமிழில் பெரிதாக எந்த சீரியல்களிலும் நடிக்கவில்லை..
ஆனால், விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கு பெற்று தன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்தார்.. இதையடுத்து சிறிது இடைவெளிக்கு பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான நாச்சியார்புரம் தொடரில் தனது கணவர் தினேஷ் உடன் ஜோடியாக சேர்ந்து நடிக்க தொடங்கினார்..
நாச்சியார்புரம் சீரியல் நன்கு விருவிருப்பாக தொடர்ந்து ஒளிப்பரப்பாகி கொண்டிருந்த வேலையில் திடீரென அத்தொடர் தவிர்க்க முடியாத சில காரணங்களால் பாதியிலே முடித்து வைக்கபட்டது..
இதை தொடர்ந்து மீண்டும் விஜய் டிவியில் ஏற்கனவே ஒளிப்பரப்பாகி கொண்டிருந்த நாம் இருவர் நமக்கு இருவர் தொடரின் இரண்டாம் பாகத்தில் ரச்சித்தா மஹாலக்ஷ்மி கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்..
இத் தொடரில் ரச்சிதாவின் அசாத்திய நடிப்பால் முன்பு இருந்த ரசிகர்களை விட நாம் இருவர் நமக்கு இருவர் தொடரின் மூலம் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது..
இதையடுத்து, தற்போது ரச்சிதா கலர்ஸ் தமிழ் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாகும் இது சொல்ல மறந்த கதை சீரியலில் கதாநாயகியாக நடித்து அசத்தி வருகிறார்..
தொடர்ந்து சமூக வலைதளத்தில் ஆக்டிவ் ஆக செயல்பட்டு வரும் ரச்சித்தா அவ்வ போது தனது ரசிகர்களிடம் நேரலையில் உரையாடியும் வருகிறார்..
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் தனது சமூக வலைதளத்தில் தன்னுடைய சண்டை காட்சி வீடியோ ஒன்றை வெளியிட்டு இது நான் சிறப்பு தோற்றத்தில்,
ஒரு சீரியலில் நடித்த சண்டை காட்சி இந்த காட்சி எந்த சீரியலில் ஒளிப்பரபாகும் என கெஸ் செய்யுங்கள் என தனது ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார்..
இதற்க்கு ரசிகர்கள் பலரும் தங்கள் கமண்டுகளை தெரிவித்து வந்த நிலையில் இந்த சண்டை காட்சி இடம் பெற்ற சீரியல் நேற்று ஜீ தமிழில் ஒளிபரப்பாகியுள்ளது..
ரச்சித்தா மஹாலக்ஷ்மி முதன் முதலில் சண்டை காட்சியில் நடித்த சீரியல் தற்போது ஜீ தமிழில் ஓடி கொண்டிருக்கும் புது புது அர்த்தங்கள் தொடர்.
இந்த தொடரின் நேற்றைய எபிசோசடை டிவியில் பார்த்த அவரது ரசிகர்கள் பலர் சண்டை காட்சி குறித்த கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்..
ரசிகர்களின் கருத்துகளுக்கு தனக்கே உரிய பாணியில் ஜாலியாக பதில் கருத்துக்களை தன் ஃபேன்ஸ்களுக்கு தெரிவித்து வருகிறார்.