Last Updated on September 17, 2022 by Dinesh
20 வருடமாக பாம்புபிடிக்கும் தொழிலை செய்து வந்தவருக்கு அந்த பாம்பினாலே நேர்ந்த சோகம் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரப்பாகியுள்ளது..

ராஜஸ்தான் மாநிலத்தில் பாம்பு மனிதர் என்றழைக்கபட்டு வந்த வினோத் திவாரி என்பவர், பாம்பு தீண்டி சம்பவ இடத்திலே பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..
ராஜஸ்தான் மாநிலம், சுரு மாவட்டத்தை சேர்ந்த வினோத் திவாரி வயது (45). இவர் கடந்த 20 வருடங்களாக பாம்பு பிடிக்கும் தொழிலை செய்து வந்துள்ளார். இவரையில் வினோத் திவாரி நூற்றுக்கணக்கான பாம்புகளை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது..
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று கொஹமுடி பகுதியில் உள்ள ஒரு கடையில் பாம்பு புகுந்துவிட்டதாக வினோத் திவாரிக்கு கிடைத்த தகவலின் படி பாம்பை பிடிப்பதற்காக சம்பந்தப்பட்ட கடை இருக்கும் பகுதிக்கு வந்துள்ளார்..
அப்போது, அந்த கடையில் இருந்த நாகபாம்புவை பிடித்த வினோத் திவாரி அந்த கடைக்கு வெளியேவே அமர்ந்து கொண்டு சர்வ சாதாரணமாக பிடிபட்ட
நாகபாம்பினை ஒரு பையினுள் நுழைக்க முற்படுகிறார் அப்போது திடீரென வினோத் திவாரியின் கை விரலில் நாகபாம்பு தீண்டி விடுகிறது..
பின்னர், உடனே அந்த நாகபாம்பினை பைக்குள் போட்டுவிட்டு பையை கட்டிவிட்டு தன் கை விரலை உதறியபடி சிறிது நேரம் அமர்ந்து இருக்கிறார்.
பின் அங்கு இருந்து சில அடிகள் நடந்து சென்று பாம்பு இருக்கும் பையினை ஒரு இடத்தில் ஓரமாக வைத்துவிட்டு சிறிது தூரம் நடந்து செல்கிறார்..
அவ்வாறு நடந்து செல்கையில் வினோத் திவாரி திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலே சில நிமிடங்களில் இறந்து விடுகிறார்.
தற்போது இந்த காட்சிகள் அடங்கிய சிசிடிவி வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது..
கடந்த 20 ஆண்டுகளாக ராஜஸ்தான் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பிடிபடும் பாம்புகளை பிடித்து அடர்ந்து வன பகுதியில் விட்டுவந்த வினோத் திவாரி அதே பாம்பு கடியினால் இறந்து இருப்பது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..
மனிதர்கள் காடுகள், வனபகுதிகள், மலைகள், மலைமேடுகள் போன்றவற்றின் மீதான ஆக்கரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது.
விலங்குகளின் வாழ்விடங்களை மனிதர்கள் தெரிந்தும் தெரியாமலும் அழித்து வருவதின் விளைவாக அவைகளுக்கு இருப்பிடம் இன்றி மனிதர்கள் வாழும் குடியிருப்பு பகுதிக்குள் வேறு வழி இன்றி வந்து விடுகின்றன..
மனிதர்கள் வாழ்விடம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே போன்று விலங்குகளின் வாழ்விடமும் இந்த பூமியில் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.