இந்தியாவில் டிஜிட்டல் ரூபாய் (சில்லறை பரிவர்த்தனை ) முறை மிக விரைவில் புழக்கத்திற்க்கு வரவிருக்கிறது..

ரிசர்வ் வங்கி கடந்த (2022) நவம்பர் 1 ஆம் தேதி முதன் முறையாக டிஜிட்டல் நாணயத்தை அறிமுகபடுத்தி இருந்தது. இந்த டிஜிட்டல் ரூபாய் நாணயமானது முற்றிலும் ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறையின் கீழ் நடைபெற்று வருகிறது. டிஜிட்டல் ரூபாய் பயன்படுத்துவது முழுக்க முழுக்க சட்ட ரீதியானது இதனை இந்திய அரசும் ஏற்க்கும் ஒன்றானது..
இந்த டிஜிட்டல் ரூபாய் நாணயத்தை நவம்பர் 1 ஆம் தேதி அறிமுகபடுத்தபட்ட போது பெரிய அளவிலான பரிவர்த்தனைகளுக்கு மட்டும் பயன்படுத்தபட்டு வந்தது. இந்த பரிவர்த்தனைகளை அச்சமயத்தில் எஸ்பிஐ, எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசி வங்கி, கோட்டக் மஹிந்த்ரா பேங்க், பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், யெஸ் பேங்க், எச்எஸ்பிசி வங்கி என மொத்தம் ஒன்பது வங்கிகள் மட்டும் இந்த டிஜிட்டல் ரூபாய் பரிவர்த்தனைகளை வர்த்தகம் செய்ய அனுமதி அளித்திருந்தது..
தற்போது, டிசம்பர் 1 ஆம் தேதி ரிசர்வ் வங்கி சில்லறை டிஜிட்டல் ரூபாய்க்கான முதல் சோதனை முறையை அறிமுகபடுத்துக்கிறது. இதில் பங்கு பெரும் வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்கள் உள்ளடக்கிய குழுக்களிடம் சோதனை முறையில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பயன்படுத்தபடும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது..
பரிவர்த்தனைகளை ஒரு நபர் மற்றொரு நபருக்கும், ஒரு நபர் ஒரு வணிகருக்கும் என இரண்டு வகையான முறையில் சோதனை செய்யபட உள்ளன. இதில் வணிகர்களுக்கான கட்டணங்களை வணிகர் இடங்களில் காட்டபடும் ( QR ) கோடுகளை பயன்படுத்தி பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்..
ரொக்கத்தை போலவே, இது எந்த வட்டியையும் பெறாது மேலும் வங்கிகளில் வைப்பு தொகை போன்ற பிற பணமாக மற்றபடலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது..
இந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள மொத்தம் எட்டு வங்கிகள் அடையாளம் காணபட்டுள்ளன. இதில் முதல் கட்டமாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசி வங்கி, யெஸ் பேங்க் மற்றும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் என நான்கு வங்கிகள் நாடு முழுவதும் உள்ள நகரங்களில் தொடங்கபட உள்ளன..
பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, எச்டிஎஃப்சி வங்கி மற்றும் கோட்டக் மஹிந்திரா வங்கி ஆகிய நான்கு வங்கிகளும் இந்த சோதனைக்கு தொடர்ந்து இணையும்.
மேலும், இந்த பரிவர்த்தனையில் மும்பை, புது டெல்லி, பெங்களூரு மற்றும் புவனேஸ்வர் ஆகிய நான்கு நகரங்களில் சோதனை நடத்தபடுகிறது. பின்னர், அகமதாபாத், காங்டாக், குவஹாத்தி, ஹைதராபாத், இந்தூர், கொச்சி, லக்னோ, பாட்னா மற்றும் சிம்லா ஆகிய நகரங்கள் வரை நீட்டிக்கபட உள்ளது..
தேவைக்கேற்ப அதிகமான வங்கிகள் மற்றும் பயனர்கள் பரிவர்த்தனைகளில் சேரும் போது பரிவர்த்தனைகளை .மற்ற நகரங்களில் படிபடியாக விரிவாக்கம் செய்யபடலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.