NewsTamilnadu

samantha : எனக்கு மியோசிடிஸ் எனப்படும் நோய் கண்டறியபட்டுள்ளது சமந்தா உருக்கம்

Last Updated on October 29, 2022 by Dinesh

உடலில் டிரிப்ஸ் ஏற்றி கொண்டு யசோதா படத்திற்க்கு டப்பிங் செய்யும் புகைபடத்தை தனது இன்ஸ்டாக்ரம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு உருக்கமாக பதிவிட்டுள்ளார்..

samantha : எனக்கு மியோசிடிஸ் எனப்படும் நோய் கண்டறியபட்டுள்ளது சமந்தா உருக்கம்
samantha

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வரும் சமந்தா தற்போது தெலுங்கில் புதுமுக இயக்குனர் ஹரி-ஹரீஷ் என்பவரது இயக்கத்தில் யசோதா படத்தில் நடித்து வருகிறார் சமந்தா. ஸ்ரீதேவி மூவிஸ் தயாரிக்கும் யசோதா படத்தில் சமந்தா, வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்..

இசையமைப்பாளர் மணி ஷர்மா இசையில் உருவாகும் யசோதா திரைப்படம் பான் இந்தியா படமாக தயாராகி வருகிறது.

யசோதா திரைபடம் வரும் நவம்பர் 11 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில் நேற்று முன் தினம் யசோதா படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது..

இந்நிலையில், தற்போது யசோதா படத்திற்க்கு ட்ரிப்ஸ் ஏற்றி கொண்டே டப்பிங் செய்யும் புகைபடத்தினை வெளியிட்டதுடன் உருக்கமான பதிவு ஒன்றையும் சமந்தா பதிவிட்டிருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்..

அந்த பதிவில், ” யசோதா படத்தின் ட்ரைலருக்கு உங்களிடம் இருந்து வந்த ஆதரவு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது நான் உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொண்ட அன்பும், தொடர்பும் தான் வாழ்க்கை என் மீது வீசும் முடிவில்லாத சவால்களை சமாளிக்க எனக்கு வலிமை அளிக்கிறது..

சில மாதங்களுக்கு முன்பு எனக்கு மியோசிடிஸ் (myositis ) எனப்படும் தன்னுடல் தாக்க நோய் ( autoimmune ) இருப்பது கண்டறியப்பட்டது. இது முழுவதுமாக குணமடைந்த பிறகு தெரிவிக்கலாம் என இருந்தேன்

ஆனால், நான் எதிர்பார்த்ததை விட இது குணமடைய சிறு காலம் எடுக்கும். வலுவான முன்னிறுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதை நான் மெதுவாக உணர்கிறேன்..

இந்த பாதிப்பை ஏற்று கொண்டு நான் போராடி கொண்டிருக்கிறேன் நான் விரைவில் பூரண குணமடைவேன் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நான் உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் நல்ல நாட்களையும், கெட்ட நாட்களையும் அனுபவித்து வருகிறேன்.

இன்னும் ஒரு நாளை என்னால் கையாள முடியாது என்று உணர்ந்தாலும், எப்படியாவது அந்த தருணம் கடந்து செல்கிறது,

நான் குணமடைய இன்னும் ஒரு நாள் நெருக்கமாக இருக்கிறேன் என்று மட்டுமே அர்த்தம் என்று நினைக்கிறேன் I Love You இதுவும் கடந்து போகும் என பதிவிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !