Sini Shetty மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யபட்டு இன்று அவருக்கு மகுடம் சூட்டபட்டதுள்ளது..

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 21 வயதான ஷினி ஷெட்டி நேற்று மாலை மும்பையில் நடைபெற்ற மிஸ் இந்தியா அழகி இறுதி போட்டியில் மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யபட்டு மகுடம் சூட்டபட்ட புகைபடங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது..
நேற்று மாலை மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்ற விஎல்சிசி ஃபெமினா மிஸ் இந்தியா அழகி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சிவப்பு கம்பல விருந்தினர்களாக கடந்த 2020-இல் மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யபட்ட மானசா வாரணாசி மற்றும் 2020-இல் மிஸ் கிராண்ட் இந்தியாவாக தேர்வான ஷியோகாந்த் ஃபெமினா , 2020-இன் மிஸ் இந்தியா ரன்னர் அப்பான மன்யா சிங் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்..
மேலும், இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக நேஹா தூபியா மற்றும் மலைக்கா அரோரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவர்கள் நேற்று மாலை ஜியோ கன்வென்ஷன் மையத்தில் சிவப்பு கம்பல வரவேற்பில் வரவேற்க்கபட்டனர்..
தற்போது நடைபெற்ற 2022 மிஸ் இந்தியா அழகியாக கர்நாடகாவை சேர்ந்த ஷினி ஷெட்டி தேர்வானார்.. மேலும் 2022 முதல் ரன்னர் அப்பாக ராஜஸ்தானை சேர்ந்த ரூபல் ஷெகாவத் மற்றும் இரண்டாவது ரன்னர் அப்பாக உத்திரபிரதேசத்தின் ஷினதா சவுகான் ஆகியோர் தேர்வு செய்யபட்டுள்ளனர். https://www.natshathiram.com/tamilnadu/today-covid-19-cases-in-tamilnadu-district-wise-list-today-tamil-live-news-today/