Last Updated on December 27, 2022 by Dinesh
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வாழும் குடும்பங்களுக்கு ரூ.1000 .ரொக்கம் வழங்கபடும் என தமிழக அரசு அறிவிப்பு..

வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழர் திருநாளான தைப் பொங்கல் பண்டிகையைதமிழக மக்கள் சிறப்பாக கொண்டாடும் நோக்கில்,
தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க . ஸ்டாலின் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..
இந்த கூட்டத்தில் எடுத்த முடிவின் படி, வரும் 2023 தைப் பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வாழும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, மற்றும் இதனுடன் ரூ.1000 ரொக்க பணம் வழங்க முடிவு செய்யபட்டுள்ளது..

கடந்த ஆண்டு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்க பணத்திற்க்கு பதிலாக,
அரிசி, சர்க்கரை, திராட்சை, முந்திரி, நெய், பருப்பு போன்ற பொங்கல் வைக்க ஏதுவான பொருட்களை மட்டும் வழங்கியது..
இந்த வருடம் கூடுதல் சிறப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக அரசு
பொங்கல் தொகுப்பு பரிசுடன் ரூ.1000 ரொக்க பணமும் வழங்க முடிவு செய்து அதிகாரபூர்வமான அறிவிப்பை இன்று வெளியீட்டு உள்ளது..
பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வரும் (02-01-2023 ) சென்னையில் துவங்கி வைக்கிறார்.
இதை தொடர்ந்து, அன்றையே தினமே தமிழ்நாடு மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் நிகழ்வினை துவங்கி வைக்கிறார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.